அதிபர் இடமாற்றத்தால் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து வட்டு. மத்திய கல்லூரிக்கு இரு நாள்கள் விடுமுறை

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று வலிகாம வலயக் கல்விப் பணிப் பாளர் சந்திரராஜா தெரிவித்தார். குறித்த பாடசாலையிலிருந்து இட மாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நிய மிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்தே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர்...

மூன்றாவது நாளாகத் தொடரும் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் மாணவர்களின் போராட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை. எதிர்வரும் நாட்களில் தமக்கான நீதி கிடைக்கா விட்டால் வீதி மறியல் போராட்டம் செய்யப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மாணவர்களின் போராட்டம்...
Ad Widget

பாடசாலையிலிருந்து இடை விலகியவர்கள் வடக்கில் அதிகம்

வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...

வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மீண்டு கல்வியைத் தொடர வணிகர் கழகம் உதவி

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படின் அறிவிக்கவும்

நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...

அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடை

கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை நடைபெற்றுகொண்டிருக்கின்ற பரீட்சை மத்தியநிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மத்தியநிலையமாக தொழிற்படும் மத்தியநிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரே இவ்வாறு அலைபேசியை எடுத்துச்சென்றுள்ளனர். அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி பரீட்சைகள் சட்டத்தின்...

பொரு­ளியல் வினாப் பத்திரம் எப்­படி வெளி­யா­னது

க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் முதல்நாள் 04 ஆம் திகதி காலை நடை­பெற்ற பொரு­ளியல் 1 வினாப்­பத்­திரம் பரீட்­சார்த்­தி­களின் கைக­ளுக்கு சென்­றது எப்­படி? உண்­மையில் பரீட்­சைத்­தி­ணைக்­கள அறி­வித்­த­லின்­படி இப்­பத்­தி­ரத்­தி­லேயே பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளித்­தி­ருக்­க­வேண்டும். இது தொடர்­பாக அப்­பத்­தி­ரத்­திலே ஆரம்­பத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் குறிப்­பிட்ட நிலை­யத்தில் பத்­தி­ரத்­திற்­குப்­ப­தி­லாக கட்­ட­மி­டப்­பட்ட வேறு பத்­திரம் வழங்­கப்­பட்டு அதில் பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டதாம். அத­னையே...

மல்லாவி ம.க.யில் ஜீ.சீ.ஈ.உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள மாணவிகள்! முல்லை மாணவர்கள் அதிருப்தி!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும். பாராட்டுப் பெறும் பத்துக் கதைகளுக்கு, தலா 2000 ரூபாய்கள் வழங்கப்படும். போட்டி முடிவு திகதி 15.10.2015. மேலதிக விவரங்கள்...

க.பொ.த (உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்! பரீட்சைக்குத் தோற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

க.பொ.த உயர்தர பரீட்சையில் முதலாம் கட்டம் இன்று (04) ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இப்பரீட்சைக்கென பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் தோற்றுகின்றனர். இவர்களுக்கென நாடு தழுவிய ரீதியில் 1800 க்கு மேற்பட்ட பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பரீட்சையின் முதலாம் கட்டம்...

பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல்...

பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்

இந்த முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை சுட்டெண் அடங்கிய சுற்றறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாத பாடசாலை அதிபர்கள் உடனடியக அறியத் தருமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இம்முறை பரீட்சை வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடுபூராகவும் உள்ள 2907 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சையில் தோற்றுவதற்காக 340,930...

தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோரல்

2016ஆம் ஆண்டில் தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோர கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடமாற்றம் விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் தொடர்பில் குறித்த விண்ணப்பங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பங்களை எதிர்வரும்...

கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

தேசிய அபிவிருத்தி நிலையத்தில் பிராந்திய நிலையங்கள் மூலம் "முதியோர் பராமரிப்பு டிப்ளோமா" "சமூக பராமரிப்பு டிப்ளோமா"கற்கை நெறிகளை பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி பாடநெறிக்கான வகுப்புக்கள் வாராந்தம் சனி ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக பதிவாளர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 488A, நாவல...

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடு

பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார். நடைமுறையிலுள்ள முறையினால் தேசிய ரீதியான மதிப்பீடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். பாடசாலைகளின் ஒப்படை செயற்பாடுகளின்...

பல்கலைக்கழகத்திற்கு இணையும் மாணவருக்கான பதிவுகள் மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறும்

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் போது, மாணவர்களுக்கான பாடத் தெரிவில் சிக்கல் ஏற்படுத்தப்படுவதோடு அவர்களுக்கு அசாதாரனம் இழைக்கப்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹன்த சில்வா தெரிவிக்கின்றார். இந்த விடயம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து, அதனை...

க.பொ.த பரீட்சை விண்ணப்பங்களில் மாற்றம்

விண்ணப்பதாரர்களின் வசதி கருதி கல்வி பொதுத் தராதர உயர்தர விண்ணப்பங்களில் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்காக 3 விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். அதற்கமைய விண்ணப்பங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம், எப்பிரிவில் தோற்றவுள்ளனர் மற்றும் பரீட்சை இலக்கம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்....

க.பொ.த உயர்தரப்பரீட்சை 2015 கால அட்டவணை இணையதளத்தில்

2015 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை www.doenets.lk இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதம் 4ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தொடர்ந்து 17ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் 24ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடையும்...

இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை ஆகிய காரணங்களினால் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகள் தவிர்ந்து ஏனைய அனைத்து பாடசாலைகளும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் 3ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும்...

புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதில் பிரச்சினை இல்லை

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓகஸ்ட் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த கல்விப் பொதுத்...
Loading posts...

All posts loaded

No more posts