- Wednesday
- January 15th, 2025
தற்சமயம் ஜி.சீ.ஈ. (சாதாரணதரப்) பரீட்சை நடந்துக் கொண்டிருக்கும் பரீட்சை நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 600 ற்கு மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட அதிரடிப்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம், வலயக்கல்விக் காரியாலயங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த அதிரடிப்படையில் பங்கேற்கவுள்ளதாகவும், வினாப்பத்திரங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இணைப்பு மத்திய நிலையங்களில் 24 மணித்தியாலங்களும், பரீட்சை நடக்கும்...
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம்...
உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது வரைக்காலமும்,...
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பரீட்சை மண்டபங்களிலும் இருள் சூழ்ந்த நிலைமை காணப்படுவதனால் மாணவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கினர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 3261 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2286 தனிப்பட்ட...
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ் - இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம். சிறி கணேஷ் புடவையகம் - இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் - இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் - இல-63 ,பெரிய...
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php
2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக...
பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய் தொடர்பாக அவர்களின் குருதி மாதிரி பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது...
அடுத்த வருடம் மாணவர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக் கொள்ள வவுச்சர் வழங்கும் திட்டத்தில் தாம் ஈடுபடப் போவதில்லை என, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப்பாடம் சித்தியடையாமல் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டும் கல்வி கற்கும்முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கல்வியமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்....
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா...
பாடசாலைகளில் உள்ள நெருக்கடிக்கு தீர்வாக 'அருகிலுள்ள பாடசாலை... சிறந்த பாடசாலை' என்ற தொனிப்பொருளில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பிரபல பாடசாலைகளுக்குள்ள பௌதீக மற்றும் ஆளணி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நேற்று...
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும், எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை வவுச்சர்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்...
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. நேற்றுக் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள்...
நான்கு அல்லது ஐந்து வர்த்தகர்களை அல்ல நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களை கருத்தில் கொண்டே வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை நிமித்தம் வவுச்சர் வழங்கும் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பல மாணவ, மாணவிகள் அவரது கையால் வவுச்சரைப்...
வடமாகாண பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5ஆம் திகதியே மூடப்படும் என வடமாகாண கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். கடந்த 26ஆம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன்...
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்....
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைகளுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் குறித்து பெற்றோர் வீடுகளில் இருந்தவாறே அறிந்துகொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் முறையொன்றை கொக்குவில் இந்துக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு மாணவர் சார்பாக பதிவு பெயர் மற்றும் கடவுச்சொல் என்பன வழங்கப்படும். அதனைக் கொண்டு, பாடசாலையின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் பிள்ளை அன்றைய தினம் பாடசாலைக்கு சென்றுள்ளாரா? என்பதை...
Loading posts...
All posts loaded
No more posts