- Wednesday
- January 15th, 2025
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால்...
நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ண நிலையைக் காரணங்காட்டி வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளை நண்பகல் 12.00 மணிக்கு மூடும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சும்,சுகாதார அமைச்சும் வலியுறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் வெப்ப காலநிலையில் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை...
தேசத்தின் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமான, இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டக்கீழ் படிப்புகளுக்கான ஜுன் 2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) பட்டம் என்பது தகவல் தொழில்நுட்பம், தகவல் கட்டமைப்புகள்...
பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேடுகளை நாளை 24 ஆம் திகதி முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இந்த கையேட்டைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்காக...
பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால் கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது இது பற்றி தெரியவருவதாவது. பழைய மாணவர் சங்கங்களுக்கு தலைவராக அதிபர் தான் இருக்கவேண்டும் என்ற வகையிலான சுற்றறிக்கை ஒன்று வடமாகாணசபை கல்வியமைச்சினால் அனுப்பட்டிருப்பதாகவும் அதனை காரணம் கூறி பாடசாலையில் சங்க பொதுக்கூட்டத்தினை நடாத்துவதாயின் அதிபரை தலைவராக்க வேண்டும் என்ன வற்புறுத்தியதால் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவுள்ளதாக...
பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில், இந்த வவுச்சர் முறையை ரத்து செய்து, இதுவரை காலமும் இருந்துவந்தது போல், பாடசாலை ரீதியில் சீருடைக்கானத் துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம்...
பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 25 ஆயிரத்து 200 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டடனர். இம்முறை 2 ஆயிரத்து 403 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது,
உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நீரிழிவு சிகிச்சை நிலையம் நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள். கட்டுரை தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு, உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும். வயதுப்பிரிவு: கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை. மத்திய பிரிவு: தரம் 6...
கல்விப் பொதுத்தராதர சாதார தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பின்னர் மீள் மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களம் கூறியுள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் மீள் மதீப்பீட்டு விண்ணப்பத்தை அதிபரிடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தனியார் விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்தில் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க...
பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இனிவரும் காலத்தில் இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இணையம் ஊடாக விண்ணப்பிப்போருக்கு அவர்களின் கைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக தகவல் அனுப்பப்படும்.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில்இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாய கக்கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார் இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்அவர்கள், கடந்த காலங்களில் வடக்கின் கல்வி...
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 23 சதவீதமான மாணவர்கள், காலை உணவை உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்' என்று யாழ்ப்பாணம் பாடசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தெரிவித்தார். 'வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் - 3' நூல் வெளியீட்டு நிகழ்வில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது....
நாடாளாவிய ரீதியிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 08ஆம் திகதி மூடப்படும். அப்பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 25ஆம் திகதியன்று திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும், முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 11ஆம் திகதியன்று மூடப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவிததுள்ளது.
கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கான சர்வதேச தரத்திலான தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டுமானப் பணிகள்...
தற்போதுள்ள கல்வி முறைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க தற்போதய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரோயல் கல்லூரியில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இம் மாற்றத்தினை எதிர்வரும் மே...
அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகள் மஹாபொல புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள வசதியாக மூன்று இலட்சம் வருமானம் என்ற கட்டுப்பாட்டை ஆறு இலட்சமாக அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு உத்தேசித்துள்ளது. தற்போது அரசாங்க ஊழியர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபாவை வருடாந்த வருமானமாக பெறுவாராயின் அவரது பிள்ளை மஹாபொல புலமைப் பரிசிலைப் பெறும் தகுதியை இழக்கின்றார். இந்த மூன்று...
கல்வி பொதுத் தாராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்த 8,698 மாணவ, மாணவிகள் பிரதான ஆறு பாடங்களில் சித்திபெற தவறிவிட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இது பரீட்சை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் 3.18 சதவீதம் என்பதுடன் 2014ஆம் ஆண்டு 8,147 பேர் பிரதான ஆறு பாடங்களில் சித்திபெற தவறியிருந்தனர். இது 3.17 சதவீதமாகும்.
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடி விடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;...
யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினரால் வெளிவாரிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வணிக முதற்தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக இரண்டாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக மூன்றாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக நான்காம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக முதற்தேர்வு 2013 பழைய பாடத்திட்டம் மீள்பரீட்சை, வணிக மாணி...
2015ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ள திணைக்களம் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தை விரைவில் ஊடகங்களினூடாக வௌியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts