யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை வழமைக்குத் திரும்பியது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
Ad Widget

சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிவில் உடையணிந்த பொலிஸார்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என யாழ் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக...

முன்பள்ளி கல்வியை இலவசமாக வழங்க திட்டம்!

இலங்கையில் முன்பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியாவின் புத்ரஜாயா நகரில் ஆசிய பசுபிக பிராந்திய நாடுகளுக்கான முன்பிள்ளை பருவத்தினர் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை வடிவமைப்புக்கான (Asia - Pacific Regional Policy Forum on Early Childhood Care and Education...

பாலியல் குற்றம் புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்!

பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த...

சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியாகின

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்த முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை www.doenets.lk அல்லது results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அறியமுடியும்.

உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை!

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பரீட்சை ஆணை­யாளர் எஸ்.பிர­ண­வ­தாஸன் தகவல் தரு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்­தரப் பரீட்சை...

யாழ் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா...

சிறை நிரப்புவதில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களா?? நீதிபதி இளஞ்செழியன்

சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உடனடியாக நிறுத்தப்பட...

மகனை பாடசாலைக்கு அனுப்பாத தாய்க்கு விளக்கமறியல்

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை...

வகுப்பறைக்குள் நுழைந்த அதிபரைத் தாக்கிய ஆசிரியர்

வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே,...

கல்வி நிர்வாக சேவைக்குள் ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்...

யாழ்ப்பாணப் பாடசாலைகளின் அவலநிலை

யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரையில் முக்கிய மானவராகக் கருதப்படுபவர் கடையிற் சுவாமிகள். இந்தியாவில் இவர் நீதிபதியாக இருந்த போது சட்டத்திற்கிணங்க குற்றவாளி யொருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கி விட்டாராம். இதனால் இவருடைய மனசாட்சியில் ஏற்பட்ட ஒரு வித உறுத்தல் தான் அவரது துறவு வாழ்க்கைக்குக் காரணமாம். இலங்கையின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசரொருவர், தான் வழங்கிய ஒரு...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு...

சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் கல்வியினை தொடரும் மாணவர்கள். கண்டு கொள்ளாத அதிகாரிகள்

யாழ்.திருநெல்வேலி சந்தை இறைச்சிக்கடை தொகுதி பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் இயங்குவதாகவும், அதனால் அப்பகுதிக்கு செல்ல முடியாத தூர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது. திருநெல்வேலி சந்தையில் ஒரு பகுதி இறைச்சிக்கடை கட்டட தொகுதியாக காணப்படுகின்றது. அந்த கட்டட தொகுதியின் கீழ் பகுதியில் மீன் சந்தையும் மேல் மாடியில் இறைச்சிக் கடை தொகுதிகளும் காணப்படுகின்றது. குறித்த...

அனுமதிப் பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைப்பு

இவ் வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் மூலம் தோற்றுபவர்களுக்கு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவரவர் முகவரிக்கும் இவ்வாறு அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உரிய தினத்துக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள்...

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி...

கணித, விஞ்ஞானத்தில் 40 சதவீத சித்தியை எட்டவேண்டும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் வடமாகாணத்தில் 18 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் தற்போது சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டு கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம்...

பாலியல் துஸ்பிரயோகம்; வரணி ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வரணிப் பகுதி பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைப்பதற்காக செயற்பட்ட பழைய மாணவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை...

போதைப் பாவனையால் யாழ். நகர பாடசாலை மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது! நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நகர்ப் புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது எனக் கவலை வெளியிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அத்தகையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு...
Loading posts...

All posts loaded

No more posts