பொலிஸாரை விட பாடசாலைகளே இலஞ்சம் வாங்குவதில் முன்னிலையில்!

நாட்டில் இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இடம்பெறும் நிறுவனங்களில்இதனை ஒழிப்பதற்கு இலஞ்ச...

உலகில் தடைசெய்யப்பட்ட உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில்!

உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ள உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அமெரிக்க விளையாட்டு விஞ்ஞான கல்லூரி, பிரிட்டன் விளையாட்டு விஞ்ஞான கல்லூரி மற்றும் இராணுவ உடற்பயிற்சி முறையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 108 உடற்பயிற்சி வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த உடற்...
Ad Widget

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவித்தல்

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியிடப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறித்த அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி 17 பாடநெறிகளுக்கு 4000 மாணவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அராஜகம் : தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் தாக்குதல்!!

யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு...

தேசிய தமிழ் மொழி தினம் ஒக்டோபர் 23 கண்டியில்

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ்...

வத்தளை தமிழ் பாடசாலைக்கு எதிர்ப்பு!! இராதாகிருஸ்ணன் கண்டனம்

வத்தளை - ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிகல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இதற்கு அப் பிரதேசத்தில் உள்ள பெருபான்மை இன மக்கள்...

வடமாகாண ஆளூநர் கூறியது பொய் என வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம்...

யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு புதன் விடுமுறை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதில் பாடசாலை 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் இதற்கமைய 3 ஆம் தவணைக்கான பாடசாலைகள் 1 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகண கல்வி...

பேராதனை மாணவர்கள் 10 பேருக்கு வகுப்புத் தடை

பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 22ம் திகதி...

9 வயதில் இணையத்தளம் வடிவமைத்த மாணவி!

தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் நேற்று (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer...

அடுத்த வருடம் முதல் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் போது, மாணவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த காலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த...

அரசியல் விஞ்ஞான வினாத்தாளில் அரசியல் புகுந்தது

நடந்து முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான இரண்டாம் பகுதி வினாத்தாளில், அரசியல் புகுந்து விளையாடிவிட்டதாக அப்பாடத்துக்கான பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் விசனம் தெரிவித்தனர். இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 7 மற்றும் 8ஆம் வினாக்கள் இரண்டும், தற்போதைய அரசாங்கத்தை இலக்குவைத்தே கேட்கப்பட்டிருந்ததாக அம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தக் கேள்விகள் ஒன்றில், அரச...

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவித்தல்!!

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், 50 ஆயிரத்து 701 விண்ணப்பதாரிகள் தோற்றவுள்ளனர்.இதில் 421 பேர் விசேட திறனுடைய விண்ணப்பதாரிகள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இரண்டாயிரத்து 959  பரீட்சை மத்திய நிலையங்களில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சையின் பொருட்டு, மாணவர்கள் நேரத்துடனே பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க...

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் கோரிக்கை!

இந்த வருடம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடாந்தம் 4 இலட்சம் மாணவர்கள் வரை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சுட்டிக்காட்டிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார, இதுவரை இரண்டு இலட்சம் மாணவர்கள் மட்டுமே அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், குறிப்பிட்டார்....

அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? டக்ளஸ் கேள்வி!

அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை கோட்டை மன்னன் வித்தியா பண்டாரனும், யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியனும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடினர். அதே போன்று, வன்னி சிற்றரசின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனும், கண்டி மன்னனும் இறுதிவரை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கெதிராகப் போரடினர்....

யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ். பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட விஞ்ஞானப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 10 ஆம் திகதி இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது. இதேவேளை குறித்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமாக உள்ளதாகவும்...

தரம் 05 மாணவர்களின் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற இருப்பதால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி கல்வியைத் தொடரமுடியுமெனவும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அடங்கிய குழுவினரையும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த சிறீலங்கா அதிபர் சந்திப்பின் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது மாணவ குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற...

பரீட்சை முறைகேடுகளை முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம்

பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் முகவரியினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய commissionerdoe@gmail.com என்ற மின்னஞ்சலினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் முறைபாடுகளை 24 மணிநேரமும் ஆராய்வதற்கான...

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்

க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்கான அனுமதி பத்திரங்களில் மாற்றங்கள் காணப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு விண்ணப்பதாரிகளிடம் அந்த திணைக்களம் கோரியுள்ளது.தாம் விண்ணப்பித்த பாடங்கள் மற்றும் மொழி தொடர்பாக நன்கு அவதானம் செலுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அனுமதி பத்திரத்தில் ஏதாவது பிரச்சினை காணப்பட்டால்...
Loading posts...

All posts loaded

No more posts