கொக்குவில் இந்துக்கல்லூரி பரிசளிப்புவிழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாக்கிருஸ்ணன்!

யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் ஞானகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், சிறப்பு விருந்தினராக இந்து சமய கலாசார பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கௌரவ விருந்தினராக கு. ஜெயந்தன்,...

க.பொ.த. உயர்தர செயற்பாட்டுப் பரீட்சைகள் 18 ஆம் திகதி ஆரம்பம்

க.பொ.த. உயர்தர பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சங்கீதம், நடனம் மற்றும் ஓவியம் போன்ற பாடங்களுக்கான செயற்பாட்டுப் பரீட்சை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலும், உயிரியல் வள தொழில்நுட்பத்துடன் தொடர்பான செயற்பாட்டுப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி...
Ad Widget

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவரின் படங்கள் காட்சிப்படுத்த தடை

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் படங்களை காட்சிப்படுத்த பெற்றோர், பாடசாலை மட்டத்திலோ பணஅறவீடுசெய்து காட்சிப்படுத்துவதை இந்த வருடத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வியமைச்சு அவசரமாக சுற்று நிரூபமொ ன்றை நேற்று சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. ஏதேனும் பாராட்டினை மேற்கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய மாணவர்களை பாதி க்காத வகையில் பாடசாலையினுள் அடங்கும் நிகழ்ச்சித்...

யாழ்.நகர பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!! மாணவன் வைத்தியசாலையில்!!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாகவும் இதனால் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம்...

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2016 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 159 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக:...

புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் வவுனியா மாணவன் முதலிடம்!

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் வடக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர். வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்....

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை Exam சுட்டெண்" என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலமும் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்...

வெளிநாடு செல்வதாயின் ஆங்கிலம் கட்டாயம்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கிலப் பயிற்சிநெறியொன்றை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையரின் கணினி கல்வியறிவு அதிகரிப்பு

2006 -2007 வரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 16.1 சதவீதமாக காணப்பட்ட இந்நாட்டு கணினி கல்வியறிவு 2015ம் ஆண்டின் போது நூற்றுக்கு 27.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கணினி கல்வியறிவு தொடர்பில் புதிய ஆய்வறிக்கையை வௌியிட்ட போது இதனை தெரிவித்துள்ளது.இதில் , ஆண்களிடம் கணினி கல்வியறிவு நூற்றுக்கு 29.1 சதவீதமாகவும் ,...

வௌிவாரி பட்டப் படிப்புக்கள் நிறுத்தப்படப் போவதில்லை!

வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் உண்மை இல்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வௌிவாரி பட்டப்படிப்புக்களின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி 15 பல்கலைக்கழகங்களில் புதிய வௌிவாரி பட்டப்படிப்புக்களை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக...

பகிடிவதையால் கல்வியை இழந்த மாணவனுக்கு மீளவும் கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு கோரிக்கை

யாழ். பல்கலையில் பகிடிவதைக்குட்பட்டு கல்வியை இழந்துள்ள மாணவன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அம் மாணவனை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியவற்றிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவனான மங்களதேவன் ஜெயக்குமார் என்பவர் பகிடிவதை...

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: மாகாண சபையில் விவாதிக்க முடியாதாம்!!

உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன்...

உடுவில் மகளிர் கல்லூரி மாணவியைத் தாக்கிய ஆசிரியை கைது!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீது கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் தென்னிந்தியத் திருச்சபையின் தலைவர் டீ. எஸ். தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள்...

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

உடுவில் மகளிர் கல்லூரி நெருக்கடி நிலைமை தொடர்பாக தவராசா அவசர பிரேரணை

உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,...

இனி க.பொ.த. சாதாரண தர பரீட்சை சித்தியில்லாமல் உயர்தரத்திற்கு அனுமதி!!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் கணக்கில் கொள்ளப்படாமல், மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான பயிற்சி மஹரகம, கண்டி, வெயாங்கொட, களுத்துறை, வவுனியா ஆகிய இடங்களிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன. பாடசாலைக் கல்வியை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர்...

27,603 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகினர்!

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ugc என...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

”எழுந்து நிற்போம்” வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம்...
Loading posts...

All posts loaded

No more posts