- Monday
- January 13th, 2025
க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் சித்தியடையாத மாணவர்களும், கலைத்துறையில் தரம் 13 வரை கல்வி பயில்வதற்கு ஏதுவாக, புதிதாக 24 பாடங்களை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (22) கல்வி அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். ரெபோடெக் தொழில்நுட்பம் உட்பட 24 பாடங்கள் இதன்போது அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு...
உயர்தேசிய தொழில்நுட்பக்கல்லூரியின் பட்டப்படிப்பை நிறைவுசெய்த மாணவருக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ்களை வழங்கி வைத்தார்
2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் மாற்றங்களை செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மூலம்...
2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரணத் தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதியன்று ஆரம்பமாகி, டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றது. இதேவேளை,...
வடமாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும், ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 07:30 க்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 01:30 க்கு முடிவடையும்...
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களிடமிருந்து, ஆசிரியர்கள் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விழாக்கள் மற்றும் பிறந்த நாள் நிகழ்வுகளின் போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெறுமதியான பரிசுபொருட்கள் வழங்குவது வழமையாக இருந்து வருகின்றது. எனினும் அடுத்த வருடம் முதல் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் யாரும் பரிசுப் பொருட்கள் வழங்கக் கூடாது என கல்வி அமைச்சர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இதழியல் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களுக்கான சாண்றிதழ் வழங்கும் விழா நாளை 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்.நகர் ஜூம்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள ஊடக வளங்கள் பயிற்சி மைய மண்டபத்தில் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்த் தலைமையில் இந்த நிகழ்வு...
நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர் வரவில் திருப்திகரமற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கான முயற்சியானது நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகளில் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்படி மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பணர்வும் இதன்போது வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தின் போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் நின்ற மாணவ...
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக அன்றையதினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஷேட ஒருநாள்...
பல்கலைக்கழகத்தில் கற்கும் வாய்ப்பை ஒரு சில புள்ளிகளால் தவறவிட்ட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உயர்கல்வியை தொடர்வதற்காக, 8 இலட்சம் ரூபா வரை கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தில் 15 ஆயிரம் மாணவர்களை உள்ளீர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் வரவு செலவுத்...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11...
கல்விப் பொதுத்தராதர உயர்த்தர பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் டெப் (Tab) வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் டெப்களை கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் இடம்பெற்ற, ஜேர்மன் வர்த்தகம் தொர்புடைய ஆசிய பசுபிக் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை ஒரு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார்...
2019ஆம் ஆண்டளவில் சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் கூறுகையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்ற ப்படும்.13ஆம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்க...
தென் மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றும் மாணவிகள், வகுப்பறைக்குள் பியர் அருந்திவிட்டு, மோசமான முறையில் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து,...
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடி, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்...
கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் நேற்று திங்கள் கிழமை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட போது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது. நேற்று...
வடமாகாணத்தில் புதிய அதிபர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் இருந்து அதிபர் தரம் – III போட்டி பரீட்சையில் 398 பேர் சித்தி பெற்றிருந்தனர். அவர்களில் 84 பேருக்கு நேர்முகப்பரீட்சை மூலம் அதிபர் வெற்றிடம்...
யாழ்ப்பாணம் வதிரியைச் சேர்ந்த திருமதி.குணசேகரன் பொன்னரசியின் சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான பிரதீபா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இவ்வாண்டுக்கான பிரதீபா விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு நெலும்பொக்கன கலையரங்கில் இராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது திருமதி.குணசேகரன் பொன்னரசிக்கு ராஜாங்க அமைச்சரினால் இந்த விருது வழங்கப்பட்டது....
இலங்கை மற்றும் தென் இந்தியாவில் பயன்படுத்தும் ஒரு சொல்லான ‘ஐயோ’ (Aiyo) எனும் சொல் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அகராதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் புதிய தொகுப்பில் இந்த சொல் உள்ளடக்கப்பட்டுள்ளது. தென் இந்திய மற்றும் இலங்கையில் துன்பம் மற்றும் வருத்தத்தை தெரிவிப்பதற்கு இந்த சொல் பயன்படுத்தப்படுவதாக அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts