- Monday
- January 13th, 2025
சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை செய்து விட்டு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்தார். இன்றய தினம் ஆனைப்பந்தியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண ஆசிரியர் சங்க...
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப்பரீட்சையின், தொழில்நுட்பப் பாடத்துக்கான செயற்முறைப் பரீட்சையின் நடவடிக்கைகளுக்கு அதிக காலம் எடுக்க வேண்டியுள்ளமையே பெறுபேறு தாமதமாக காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு...
2016 – 2017ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்: கடந்த வருடங்களிலும் பார்க்க தெளிவான வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக...
கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப்...
வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் முதலாம் தவணையிலிருந்து அமுலுக்குவரும் என்று, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மீண்டும் உறுதிபட தெளிவுபடுத்தியுள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே, மேற்கண்ட உறுதி வழங்கப்பட்டள்ளது. அந்தச் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '16.12.2016 திகதி அன்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில், இடமாற்றத்துக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களின்...
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது...
விடுமுறைக் காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் புத்தக வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 91 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்த விடுமுறைக் காலப்பகுதியில் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவகின்றன...
வட மாகாணத்தில் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் அம் மாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் என, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
மாத்தறை நாந்துகலவையைச் சேர்ந்த என்.என். கல்யாணி (வயது 73) என்பவர் நேற்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்தை எழுதியுள்ளார். மாத்தறை , இல்மா பாடசாலையில், நடைபெறும் க.பொ.த. பரீட்சை மண்டபத்தில் இந்த முதுமைப் பெண் பரீட்சை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் முள்ளிப்பொத்தானையில் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை நிலையத்துக்கு சென்ற முஸ்லிம் மாணவிகளை பர்தா, ஹிஜாப் போன்றவற்றை கழற்றிவிட்டு வருமாறு தெரிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு செய்தியாளர் மாநாடு நேற்று...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் கலைமாணித் தேர்வு பகுதி 1 - 2013 (வெளிவாரி) பரீட்சையை, எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளையும் நாளை 08ஆம் திகதி தொடக்கம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகளுக்கு ஃபர்தா அணியக் கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஏனைய அதிகாரிகள் பணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது. பரீட்சை மத்திய நிலையமாக செயற்படும் தண்ணீற்று முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளே இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சுட்டெண்களை பரீட்சை...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதாகவும், வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதற்காகவேண்டி 65524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்களில்...
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக, எதிர்வரும் சனிக்கிழமையும் (03), ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை, ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்தப் பாடசாலைகள் 2017 ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவிருக்கின்றன. கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்டிபாக அவர் மேலும் தெரிவிக்கையில, மூவாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு நான்காயிரம் ரூபா வரையும், நான்காயிரம் ரூபா கொடுப்பனவு ஐயாயிரம் ரூபா வரையும் அதிகரிக்கப்படவிருப்பமதாக தெரிவித்தார். இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகள்...
மாணவர்களுக்கு வழங்கப்படு மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்புடவுன்னது. இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டீரப்பதாக நிதியத்தின் பதில் பணிப்பாளர் பரக்கிரம பண்டார தெரிவித்துள்ளார். மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவோரின் எண்ணிக்கை தற்பொழுது 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை தேசிய ஆள் அடையாள அட்டை பெறாதுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தே. அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக இன்று (28) விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...
2015 - 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் : வைத்திய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ...
பாடசாலை மாணவர்களின் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார். சில புத்தகங்களையும் தம்வசம் கொண்டுவந்த சிறிதரன் அதனையும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். மாணவர்கள் மத்தியில் அந்நிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் தவறான விடயங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts