- Monday
- January 13th, 2025
விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துககொள்ளப்படவுள்ளனர். இதற்கான அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்புரைக்கமைய, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்யப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார். போட்டிப்...
கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களின் விடுதி வசதிகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைப்கு எதிர்ப்புத் தெரிவித்து...
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...
நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை...
வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரனி செயலாளர் இ.இராவீந்திரன் தெரிவித்தார். நாளை மறுதினம் 12 ஆம் திகதி விடுமுறை நாளாக உள்ளது. எதிர்வரும் 14 ஆம்...
கடந்த 2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 2305 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களின் அனுமதிக்காக இதுவரை 1118 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட...
இம்முறை கஸ்டப் பிரதேசங்களில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டா முறையில் கஸ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இந்தநிலையில் இந்த சிறப்புச் சலுகையைப்...
வெளியான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியு. எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்தார். பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள்...
2016ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தியெத்தி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி சிவதுர்க்கா அண்மையில் மாகோ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியாகியவராவார். வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சிவதுர்க்கா சிறந்த பெறுபேற்றை பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று...
2016 ஆம் வருட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும். இதேவேளை, அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களும் கையடக்க தொலைபேசி மூலம் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். exam இடைவெளி intex number 7777 என்ற...
பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள பாடசாலைகளுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 7911 பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு பகல் உணவு வழங்கப்படவுள்ளதாக அவர்...
பல்கலைக்கழகத்திற்கு 2016-2017ம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஏனைய கற்கைநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படையாக...
இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி...
பாடசாலை மாணவர்கள் இலவச சீருடைகளை பெற்று கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு பத்திரத்தின் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...
யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் கல்வி ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியல், நிர்மாண தொழில்நுட்பவியல், கணிய அளவையியல் தொழில்நுட்பவியல், மோட்டார் வாகன தொழில்நுட்பவியல், தேசிய கணக்கீடு, ஆங்கிலம் மற்றும் கல்வியியல் போன்ற கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் ஐனவரி மாதம் (13)...
வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்களின் நிரந்தர நியமனத்தினை உடன் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டதை முன்னெடுத்தனர். இப்போராட்டம் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. கடந்த 05 மாதம் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்கள் நிரந்தர நியமனத்தினை வழங்க வலியுறுத்தி நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...
வடக்கின் பாடசாலைகளை 7.30ற்கு ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கின் கல்வி அமைச்சர் அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் கல்வி அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின்போதே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்து உரையாற்றினார். இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வலய விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண ரீதியிலான போட்டிகளை ஜூன்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது. அகில...
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள்...
Loading posts...
All posts loaded
No more posts