- Sunday
- January 12th, 2025
அளவுக்கு மீறி மது அருந்திய 7 பாடசாலை மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிஹிந்தலையிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே அளவுக்கு மீறிய மது போதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும் இதன்போது மதுபானத்தை பாடசாலையில் வைத்து அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அளவுக்கு மீறி மதுபானம், அருந்தியமையால் அவர்கள் போதையில் நிலை...
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர், பொரளை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அத்துடன், அங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியுறும் வண்ணம் செயற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும்...
அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும் அவற்றுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடாதிபதிகள் இதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் நேற்று (17) வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள்...
யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
இவ் வருடத்தில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இவ் வருடம் மார்ச் 28ம் திகதியும், இம்முறை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியிடப்படவுள்ளன. அத்துடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை...
அரச பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்களுக்கு இராணுவக் கல்லூரியில் பயிற்சிச் செயலமர்வை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு, எதிர்வரும் 22 ஆம் திகதி பயிற்சிக்கு வருமாறு தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
பாடசாலை மாணவர்களுக்குப் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், அவர்களின் காதுகளில், ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை மருத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் சந்த்ரா ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில், கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் , "ஒருவரின் காதில், இன்னொருவர்...
கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சாட்சரம் கணேசனை மாற்ற வேண்டாம் எனக்கூறி பாடசாலை சமூகத்தினரால் இன்று காலை 7 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. “சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”, ” வடமாகாண முதல்தர பாடசாலையை சீரழிக்காதே”, “வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொக்குவில் இந்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை”, “வேண்டும் வேண்டும் இந்த அதிபர் எமக்கு வேண்டும்...
தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய...
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதவான் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த 15 மாணவர்களும் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். பின்னர் அவர்களை இன்று வரை (2ம் திகதி) விளக்கமறியலில்...
பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை...
கண்டி - குண்டசாலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் அதே பாடசாலையில் 11, 12 மற்றும் 13ம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி குறித்த மூன்று மாணவர்களும், குண்டசாலை பகுதியிலுள்ள பாடசாலையில் வைத்து கணிஷ்ட பிரிவு மாணவர்கள்...
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. மாணவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, அரச சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் அத்தகைய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சமிபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பௌத்த மத தலைவர்கள்...
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின்...
தனியார் வீடொன்றில் சித்திரவதை முகாம் ஒன்றை நடாத்தி வந்ததாக குற்றம்சாட்டப்படும் பேராதெனிய பல்கலைக்கழக விவசாய பீட 15 மாணவர்களுக்கு இன்று முதல் (22 ஆம் திகதி) விரிவுரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ மாணவர் ஒழுக்காற்றுக் குழுப் பொறுப்பாளர் கலாநிதி ஹிடிநாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். பிரதான விசாரணை முடியும் வரையில் இவர்களது விரிவுரைத் தடை...
வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை...
கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை காலை ஆரம்பமாகும் என்று கலைப்பீடாதிபதி கலாநிதி கருணாகரன் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன்படி கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 01.03.2017 புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் அறிமுக ஆரம்ப...
தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களினால், நேற்று (20) ஒருமணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள சகல பாடசாலைகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனினும், யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போராட்டத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts