- Sunday
- January 12th, 2025
வடமாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வருடத்திலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாணத்தின் உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமாகாணத்தின் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் உறுப்பினர்...
புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூட்டமைப்பில் அங்கம்...
மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று அரசாங்கம் தீரமானித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை,...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு அனுலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் போது ஒன்பது பாடங்கள் தற்போது கட்டாய...
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி விஷேட ஒருநாள் சேவை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயம் அல்ல என்றும், அந்த மாணவர்களின் உறவு முறையை...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது. இவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு...
இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிக்காட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதற்கான வர்தத்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை...
இலங்கையில் உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலின்படி வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலின் மூலமே இது தெரியவந்துள்ளது. குறித்த தரவரிசைப் பட்டியலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 156ஆவது இடத்தில் காணப்படுகிறது. தரவரிசையில் 124ஆவது இடத்திலுள்ள டாக்கா பல்கலைக்கழகத்தைவிட பின்தங்கிய நிலையிலேயே கொழும்பு...
2016/17ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் மாணவர்களை பதிவு செய்யும் பணி தற்போது இடம்பெறுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் .14 பல்கலைக்கழகங்கள், மூன்று பீடங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் 109 பாடநெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். சாதாரண அனுமதிக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 29...
பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு சகல அரச பாடசாலைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்தாயிரம் பாடசாலைகளில் 5 ஆயிரத்து 774 பாடசாலைகளில் இந்த விவசாய உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய மேலதிக காணிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வருமானம் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு...
தொண்டர் ஆசிரிய நியமன நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி அவசர கடிதம் ஒன்றினை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது. வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி...
வடமாகாணத்தில் 8 சதவீதமான மாணவர்களே நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என வடமாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் உள்ள 891 பாடசாலைகளை சேர்ந்த 20ஆயிரத்து 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றினார்கள். அவர்களில் ஆயிரத்து 727 பேரே...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை செய்யத் தேவைப்படுபவர்கள் இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை அதிபர் ஊடாக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாடசாலைக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறார்களை மீள கற்றலில் இணைக்கும் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி – கல்மடு நகர், நாவல் நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதியில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளை கொண்ட அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியாகவுள்ளன. இதேவேளை, 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான...
இலங்கை சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2018 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே இப்போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், குறித்த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டை கடந்த...
பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார். இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைன் ஊடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற ஒரு செயற்திட்டத்தை,...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,...
இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு 13 வருடங்களுக்கு தொடர்ச்சியாகக் கல்வியை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் கல்வி அமைச்சின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்திலிருந்து...
Loading posts...
All posts loaded
No more posts