சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர்கள் மீது தாக்குதல்!!

தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய...

யாழ் பல்கலைக்கழக பதிவாளரின் முக்கிய அறிவித்தல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர்...
Ad Widget

அம்பாள்புரம் மாணவர்களுக்கு புதிய பேரூந்து சேவை!

முல்லைத்தீவு – அம்பாள்புரம் மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கடந்தவாரம் வழங்கிய பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நேற்று(புதன்கிழமை) முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேரூந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில்...

கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவுள்ள சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்கள்

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள்...

வெள்ளியன்று அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுப்பு!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளநிலையில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் இன்று முதல் வெள்ளிக்கிழமைவரை மூடப்படவுள்ளன....

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட மாணவர்கள் 4 பேருக்கு விளக்கமறியல்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த...

பல்கலை விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீட்டிப்பு

2017 - 2018ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்கும் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார். மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி...

பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 11 கிளிநொச்சி மாணவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் விடுவித்தார். கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக...

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையே மோதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த மோதல் சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும் முன்னதாக பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். அது தொடர்பில் தெரிய வருவதாவது, சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின...

யாழ். பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் விரிவுரைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கலைபீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும்...

போட்டிக் கல்விமுறைமை மாணவர்கள் மனதில் பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்க்கிறது : பொ.ஐங்கரநேசன்

போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து உரிய நேரத்தில் அணைக்கத்தவறுவார்களாயின் இதுவே பின்னாளில் எந்தக் குறுக்குவழியில் சென்றேனும் எந்தச் சதியைச் செய்தேனும் தான் விரும்பிய இலக்கை அல்லது பதவியை அடைவதற்கு அவர்களைத் தூண்டுகிறது என்று தமிழ்த்தேசியப்...

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இலவச டெப்லட் வழங்கப்படும்: கல்வியமைச்சர்

போட்டிமிக்க உலகத்திற்கு முகம் கொடுக்கும் வகையிலும், சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு இசிபத்தான கல்லூரியில் இடம்பெற்ற, முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,...

தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: யாழ்.பல்கலைகழக பதிவாளர்

யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து...

தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை!

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்....

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே மோதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்...

தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது தொடர்பில் இந்தியாவில் கலந்துரையாடல்

இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு இலவச நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை, இந்திய, மலேசிய கல்வி அமைச்சுக்களின் ஊடாக ஆசிரியர் பரிமாற்றங்களை செய்து ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய செயற்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கை கல்வி...

பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். கா.பொ.த சாதாரண தர மற்றும் கா.பொ.தர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு...

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம் திகதியும் மீண்டும் நடைபெறவுள்ளது. கொழும்பில் 51 பரீட்சை மத்திய நிலையங்களிலும், யாழ்ப்பாணத்தில் 6 பரீட்சை மத்திய நிலையங்களிலும் இந்த பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இவ்வருடத்தின் முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீள திறப்படுகின்றன. க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்படும் 58 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பமாவதோடு, குறித்த 58 பாடசாலைகளும்...

க.பொ.த. உயர்தர பரீட்சை : அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் இவ்வாறு பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கு முற்பகல் 10 மணியளவில் அனுப்பி...
Loading posts...

All posts loaded

No more posts