க.பொ.த சாதாரண தரத்தில் சுகாதாரம் கட்டாய பாடம்!

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய பாடமாக சுகாதாரம் உள்ளது. 2023ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாராண தரப் பரீட்சையில் சுகாதாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வீ மறுசீரமைப்புக் குழு...

வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும்: அரசாங்க அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்மைக்காலமாக பாடசாலை மாணவிகள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்...
Ad Widget

பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை, எதிர்வரும்; 26ஆம் மற்றும் ஜூன் 02 ஆம் திகதி ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த. உயர்தர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். www.doe.nev.s.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனைப் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இந்தப் பரீட்சைக்கு...

சாதாரண தரப் பரீட்சை ழுதும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இன்னும் கிடைக்கவில்லை!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தரம் 11 மாணவர்களுக்கான பிரதான பாடங்களின் நூல்கள் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நாடுமுழுவதும் அனைத்து தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநுால்களுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “இந்த...

யாழில் முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு சென்ற ஆசிரியை!!!

யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த...

மே-18 இல் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்து!

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும்...

மீள் திருத்தப்பட்ட பரிட்சை முடிவுகள் வெளியாகியது

மீள் திருத்தம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பரீட்சாத்திகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எதிர்வரக்கூடிய க.பொ.த உயர்தர பரீட்சையில்...

ஊவா வெல்லஸ்ஸ நுண்மதிப் பரீட்சை

கடந்த வருட உயர்தரப் பெறுபெறுகளின் அடிப்படையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நுண்மதிப் பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறியத் தந்துள்ளார். யாழ்ப்பாணம் அனுராதபுரம் கண்டி கொழும்பு மாத்தறை பதுளை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அடுத்த மாதம்...

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

வடமாகாணத்தில் 246 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பாடசாலையில் 5 வருடங்கள், அதற்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இவ்வாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டில் 246 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வலயத்தில் 53...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை!!

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த...

பாடசாலைகளுக்கான விடுமுறை ​​அறிவிப்பு

அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்!!

நள்ளிரவு வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்...

இன்று நள்ளிரவுக்குள் பரீட்சை பெறுபேறுகள்

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று வௌியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இன்று நள்ளிரவுக்குள் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வௌியிடுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறினார். இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை இந்தப் பரீட்சைக்கு தோற்றிய...

இறுவெட்டுகளில் வெளியாகவுள்ள பரீட்சைப் பெறுபேறுகள்

கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இறுவெட்டுகளில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளை இறுவெட்டுகளிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். பரீட்சைப் பெறுபேறுகளை திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்படும். அதேவேளை கொழும்பில் உள்ள...

மாணவர்களுக்கு மதியபோசனம் வழங்க நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வடக்கு, கிழக்கில் 100 மாணவர்களை விட குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இயங்கும்...

யாழ்.பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார். இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள்...

கண்டி பாடசாலைகள் இன்றுமுதல் வழமைக்கு!

கண்டியில், திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், “கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படும்” என நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் குறித்த கண்டி பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு ,அதன் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால், கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts