- Saturday
- March 29th, 2025

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது மேலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை...

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. பரீட்சை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும்...

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது....

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்...

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூடப்படும் பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி திறக்கப்படம். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25 ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும். குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்ததந்த பாடசாலை அதிகர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், கால அட்டவணைகள் தபால்...

2024 (2025) க்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மூலம் இணையவழியூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்ட அறிக்கையில் பரீட்சை திணைக்களம்...

சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர்...

இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி...

கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள...

நாளை வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. செப்டெம்பர் 23 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும்...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 வரை மூடப்பட்டிருக்குமென கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இன்று (22) முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் வலய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், தர வட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்....

அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை(09) கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) தொழிற் சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில் நாளையும்(09) போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரச பாடசாலைகள் அனைத்தும்...

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண...

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (26) முற்பகல் 11...

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் அதற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 42,883.ஆகும்...

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இவ்வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வைரஸ் தொற்றுகள் பதிவாகி வருவதாகவும் அவர்களில் இன்புளுவன்சா ஏ தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சலுடன்...

All posts loaded
No more posts