- Saturday
- January 11th, 2025
இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் 11ஆம் திகதி பரீட்சைத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் இராஜாங்க...
வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற ‘மூளை முகாம்’ (Brain Camp) என்ற விஞ்ஞான ஆய்வு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து பங்குபற்றும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவு செய்ப்பட்டுள்ளார். சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் எண்டுவெமென்ட் புரோகிராம் (STEP) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு பயிற்சித்திட்டத்தை நடத்துகின்றன. ஜூன்...
பாடசாலைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பாதுகாப்பை வழங்கும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றோரை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில்...
கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை...
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...
பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
கல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் என்பன திட்டமிடப்பட்டவாறு நடாத்தப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் குறித்த பரீட்சைகளைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு பிள்ளைகளை...
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது. அந்தவகையில் இரண்டாம் தவணைக்கான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என உளவுத்துறை தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், பின்னர் தாக்குதல் அச்சுறுத்தல் நீக்கப்பட்டிருந்த...
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2 வார கால கல்வி நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலை நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் தவணைக்கான கற்றல் மற்றும் பரீட்சை செயற்பாடுகள் வழமைப் போன்று சாதாரண முறையில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின்...
இலங்கையில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கே இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை...
வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு பொதுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கு மாகாணத்தில் 339...
பாடசாலைகள் இ பல்கலைக்கழகங்கள் மீண்டும் மே மாதம் 06 திகதி திங்கட்கிழமை திறக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது: தேசிய பாதுகாப்பு சபை கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள்...
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...
யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு...
019ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 22ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களில் முதல் பத்து இடங்களுக்குள் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் இடம்பிடிக்கவில்லை. அத்துடன், வடக்கு கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 ஆயிரத்து 495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6...
2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும்...
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....
வடக்கு மாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த தகவலை மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்...
Loading posts...
All posts loaded
No more posts