- Saturday
- January 11th, 2025
யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் இந்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் இந்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வோதயத்தின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வகையில் மும்மொழிக் கல்விக்காக...
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் அதற்கான பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பை...
2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் நாளை முதல் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக...
ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அந்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன. ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல...
சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர்...
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் ஆளுநர் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்....
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்கு 50...
யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இந்த...
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 500 ரூபாய் கொடுப்பனவு 750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வருடாந்தம் 1,30,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றனர் என்பது...
வடமாகாண பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக விபரங்களை http://WWW.edumin.np.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து...
புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில் பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில், பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்த வினாத்தாளின் 6ஆவது கேள்வி, 3ஆம், 4ஆம் அல்லது...
வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய...
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை அதிபர்களுக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் வழங்கியுள்ளார். இந்தச் சிறப்பு விடுமுறைக்கான பதில் பாடசாலை நடத்தப்படவேண்டும். பதில் பாடசாலைக்கான...
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்...
2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இதவரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. https://doenets.lk/ என்ற இணையத்தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தில்...
பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில் ஒன்றுகூடினர். பழைய மாணவர் சங்கங்களின்...
கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சை, மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தலை வெளியிடுவதில்லையென அரசு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். “உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மடிகணினி (laptop) வழங்கப்படவுள்ளது. அதனால் அவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்துவதற்கான வசதியும் கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய முதல்கட்டமாக ஆயிரத்து ஐம்பது...
பாடசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டு ஏ9 பிரதான வீதிக்கு வருகின்ற போதும் பேருந்து ஏற்றிச்செல்லாத காரணத்தினால் காலை எட்டு மணியை கடந்தும் வீதியில் காத்திருக்கும் அல்லது வீடுகளுக்கு திரும்பிச்செல்லும் நிலைமை பரந்தன் உமையாள்புரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உமையாள்புரம், பகுதிகளில் இருந்து கிளிநொச்சி நோக்கி சில பாடசாலைகளுக்கு செல்கின்ற...
Loading posts...
All posts loaded
No more posts