- Saturday
- January 11th, 2025
அரசாங்க பாடசாலைகளில் எதிர்வரும் காலங்களில், முதலாம் தவணைப் பரீட்சையை நடத்துவதில்லையென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி மற்றும்...
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட அதிபர், ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய அவர்கள் நாளை (புதன்கிழமை) இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகாரிகளினாலோ அல்லது வேறு வகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர்,...
பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில் என யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
பல்கலைக்கழகக் கற்கை நெறிகளை பகிடிவதையின் காரணமாக இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அந்தவகையில், இக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில்...
தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சு கல்வி அமைச்சிற்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பிரச்சினைகளில்...
கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணக்கியல் தொடர்பாக க.பொ.த.உயர்தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது. அரச சேவைக்கான கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்...
கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...
இடைநிறுத்தப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன இனை அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட விரிவுரையாளர்களுடன் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக அமைச்சர் பந்துல...
மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணையகத்தளத்தின் முகவரி www.mahapola.lk என்பதாகும். இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில்...
புதுக்குடியிருப்பு- வேணாவில் பாடசாலை அதிபா் இடமாற்றம் செய்யப்படவேண்டும். எனக்கோாி பெற்றோா் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். பாடசாலையின் அதிபா் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், குறித்த பாடசாலையின் அதிபா், பெற்றோர்களிடம் சாதியம் பேசுவதுடன், இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும். அத்துடன் பாடசாலை மாணவர்களின்...
மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வளங்கப்படுவதாகவும் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அந்தவகையில் ஒவ்வொரு மாதமும்...
2019 இல் நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிக்கமைவாக யாழ் இந்துக்கல்லுாரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை கல்வியமைச்சு பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது இதனடிப்படையில் அதிபரினால் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்க்கடிதத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பத்தினை கல்லுாரியின் இணையத்தளமான www.jhc.lk இலோ நேரடியாகவோ பெற்று...
வடமாகாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தில் சில அதிபர்களினதும் அதிகாரிகளினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் முகமான இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் தவறுவிடும் கல்விப்புல அதிகாரிகள் - தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நடைமுறையையும் மற்றவர்களுக்கு வேறுநடைமுறையுமாக பாரபட்சத்தைக்காட்டி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக - வலிகாமம் கல்வி வலய அதிபர் ஒருவரினால் பாடசாலையின்...
தரம் ஐந்து புலைமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் நேற்று(புதன்கிழமை) இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் ரோயல் கல்லூரி 180 புள்ளிகளும், டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி 167 புள்ளிகளும், இசிப்பத்தன கல்லூரி 164 புள்ளிகளும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 154 புள்ளிகளும், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி 175 புள்ளிகளும், ராமநாதன்...
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு வந்திருக்கின்றது. முன்னாள் போராளிகளான பிரதீபன் , மற்றும் விக்னேஸ்வரன் (B.A.in. Sociology Jaffna university Degree holders)இந்த இருவரும் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் இன்று...
பரவிவரும் டெங்கு தொடர்பில் மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர முதல்வரினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கடந்த 10ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் உயர்திரு. என். வேதநாயகன் தலைமையில்...
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிவித்தல் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும்...
Loading posts...
All posts loaded
No more posts