- Monday
- April 21st, 2025

முதலாம், இரண்டாம் தரம்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துப் பாடசாலைகளும் கடந்த (ஜூன் 29) திங்கட்கிழமை மீளத் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் ஜூலை 6ஆம் திகதி...

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் சிறப்பு சுகாதாரக் குழு நியமிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி நித்தியானந்தா தெரிவித்தார். கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 105 நாள்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் பாடசாலை அதிபர்,...

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் இன்று (29), முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 50 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தொழிற்பயிற்சி நிலையங்களை முதலில் திறப்பதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கு...

உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத்தவறியமை கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. தாம் விரும்பும் பாடசாலையை தெரிவுசெய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை...

தனியார் கல்வி நிலையங்களை நடாத்துவதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால் சிறப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பின்வரும் கோரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்திருக்கும் தீர்மானத்தால் பெற்றோரும் ஆசிரியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மேற்கொண்டிருக்கும் திருத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (11.06.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்....

க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்ரெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதிவரையும் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரெம்பர் 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே...

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6,...

இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த...

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை...

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும்...

ஜூன் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. “ஜூன் 1 முதலாம் திகதி தொடக்கம் பல கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மே 11ஆம் திகதி முதல் பணிக்கு அறிக்கையிடவேண்டும். க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண நிலை மாணவர்களுக்காக பாடசாலைகள்...

நாடுமுழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக ஆரம்பிக்கத் திட்டமிடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, கொழும்பு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். “கோரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை...

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெறுபேறுகள் பதிவேற்றப்படுகின்றன என்றும் பதிவேற்றியவுடன் முடிவுகளைப் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான...

கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார். க.பொ.த. உயர்ந்தார்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாட ரீதியாக 140 செயலட்டைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் http://www.jhc.lk/ என்ற இணைத்தளத்தில்...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்...

இலங்கை அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் 'குருகெதர' புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க...

All posts loaded
No more posts