- Sunday
- April 20th, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர்...

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமரின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின்...

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முழுமையாக கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது அனைத்து மாணவர்களுக்கும்...

புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் வரை வெளிவாரி கலை பட்டங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கலைத்துறையில் வெளிவாரிப் பட்டங்களுக்கான புதிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்ததாவது; “தற்போதுள்ள...

2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Online ஊடாக விண்ணப்பித்தல் குறித்த மேலதிக...

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை இன்றுடன் (ஓகஸ்ட் 31) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான http://onlineexams.gov.lk/onlineapps ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவும் விண்ணப்பிக்குமாறு...

கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை...

மாணவர்களுடைய சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகைகள் வகுப்பறைகள் ஒழுங்கமைக்கப்பட்டால் அனைத்துப் பாடசாலைகளை முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துத் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும் 200 பேருக்கு அதிகமாக மாணவர்களைக்...

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நான்கு கட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டு கொரோனா...

இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில்... பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கு சிறு தயக்கம் கொரோனா அச்சம் காரணமாக. தற்போது எமது பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்கள் காணப்படவில்லை. ஆகவே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லலாம். இருப்பினும் பாடசாலையில்...

பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் இன்று முதல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இதேநேரம் 200க்கும் அதிக எண்ணிக்கையில்...

பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த தரம் 1 உள்ளிட்ட அனைத்து தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....

அரச மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) வரையறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணிவரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10...

அதிபர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை ஹக் செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண...

அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஒக்டோபர் 9ஆம் திகதி மூடப்பட்டு நவம்பர் 16ஆம் திகதிவரை மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், 11, 12 மற்றும் 13 தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் வகையில் பாடசாலைகள் இடம்பெறும். ஏனைய தரங்களுக்காக வரும் ஓகஸ்ட்...

பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சுகாதார அமைச்சு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை பாடசாலைகளை மூடிவைத்திருக்குமாறு கல்வியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்...

அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட...

வடமாகாண கல்வியமைச்சின் கீழ் உள்ள பாசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களை விசேட மருத்துவ குழுவின் முன் பரிசோதிக்க மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள 184 ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் தொடர்பாக கல்வியமைச்சுக்கு நெருக்கடிகள்...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி முதற் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை...

பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் அணிவது கட்டாயமானதா என அனில் ஜாசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே...

All posts loaded
No more posts