- Friday
- January 10th, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகிய இரண்டையும் பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் சிபார்சுடன் துணைவேந்தரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் நிறைவு செய்யப்பட்டிருக்காவிட்டால் பரீட்சைகளை தாமதமாகலாம். எனினும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான இறுதி தீர்மானம் இது வரை எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வீரகேசரிக்கு தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள...
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது...
திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இதுவரை...
2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக இம்முறை விசேட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை https://www.doenets.lk/ என்ற திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்....
இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச...
கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,...
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால்...
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11இல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தரம் 11இல் பயிலும்...
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை வழமைபோன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சையை இரத்து செய்யப்படும் என முன்பு எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்வதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு எழுத்துமூல பரீட்சையினைத் தொடர்ந்து செயன்முறை...
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது. முழு கல்வி முறையையும் தற்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த...
பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறித்த தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன். காரணம்...
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயல்முறை தேர்வுகள் இந்த முறை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார். மல்வத்து அஸ்கிரிய தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக் கழகத்திற்கு தகுதிபெறும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில்...
தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை வரும் ஜனவரி 25ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு கல்வித்துறையில் தற்போதைய நெருக்கடி நிலமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்...
கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பிரேத்தியேக வகுப்பு நடத்திய பாடசாலை மூடப்பட்டதுடன் அதிபர், ஆசிரியர் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வதிரி திரு இருதயக் கல்லூரியே இவ்வாறு 20ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெறாது தரம் 5 புலமைப்பரிசில்...
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்த அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறக்கும் செயன்முறை குறித்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொது சுகாதார...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்...
தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார். எனினும் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மறு...
Loading posts...
All posts loaded
No more posts