உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ....

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்க பரிசீலனை!!

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை இந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3 ஆயிரம் பாடசாலைகள்...
Ad Widget

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் துறைசார் தரப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் எதிர்கெபாள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உகந்த சூழல் உருவாக்கப்பட்டவுடன் பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பின்னணியை முறையாக தயாரிப்பது குறித்து இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதல்...

மாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க...

நுண்கலை கல்லூரி அனுமதிக்கு இணைய வழி வாயிலாக தெரிவுப் பரீட்சை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி...

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் வடக்கு கிழக்கு மாணவர்கள் இருவர் முதலிடத்தில்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவனான தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் அதேபோன்று , விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார் கொரோனா...

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று!!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சற்று முன்னர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை!!

கோவிட் -19 வைரஸ் பரவுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் விரைவில் மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியாசிரி பெர்னாண்டோ, தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மூடப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.

பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைப்பு!!

பல்கலைகழங்களை ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பிரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைகழகங்கள் மீள ஆரம்பிப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் பல்கலைகழக ஆரம்பம் மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் – பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 27இல் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பம்

ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். “விடுதிகளை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் தொடக்கத்தில் 4 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல்...

தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 30ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் தாக்குதல்!!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்றனர். மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில்...

யாழ்.பல்கலையில் க.பொ.த. உயர்தரத்தில் ஆங்கில பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தமர்வு

கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறைத் தலைவர் சுவாமிநாதன் விமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிரதான பாடங்களில் ஒன்றாக மாணவர்கள் தெரிவு...

இராமநாதன் கல்லூரி கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்!

மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் , ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையை அடுத்தே பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் எதிர்வரும் 19ஆம் திகதியே...

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில்...
Loading posts...

All posts loaded

No more posts