- Friday
- February 21st, 2025

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் விற்கப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், அவ்வாறான பென்சில்களில் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும்...

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியினால் பெறுபேறுகளை மதிப்பிடுவதை...

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை...

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 – 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி புதன்கிழமை (8) 64 நிலையங்களில் தொடங்கியது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை...

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித்...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று புதன்கிழமை (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த...

அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும். கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் 2024.12.11 ஆம் திகதி நடைபெற்ற...

க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் நேற்றையதினம் (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பான...

பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மாணவர்கள்...

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன அதன்படி நாளை...

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர்...

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் தற்போது நடைபெற்று வரும் 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (26) மாலை இடம்பெற்ற விசேட...

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது மேலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை...

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. பரீட்சை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும்...

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது....

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேவேளை, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும்...

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூடப்படும் பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி திறக்கப்படம். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25 ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும். குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் அந்ததந்த பாடசாலை அதிகர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள், கால அட்டவணைகள் தபால்...

All posts loaded
No more posts