- Sunday
- February 23rd, 2025

யாழ்.குடாவை வாள் வெட்டுச்சம்பவங்களால் அச்சுறுத்தி வந்த பிரதான ஒருங்கிணைந்த குற்றக் குழுவாக கருதப்படும் 'ரொக் டீம்' எனும் பெயர்கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் பதிவான பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவே இவர்களை...

இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ ( ) தலமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், திரு. ஜனார்த்தனன் மற்றும் பேரவை உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவருமான...

பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால் கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது இது பற்றி தெரியவருவதாவது. பழைய மாணவர் சங்கங்களுக்கு தலைவராக அதிபர் தான் இருக்கவேண்டும் என்ற வகையிலான சுற்றறிக்கை ஒன்று வடமாகாணசபை கல்வியமைச்சினால் அனுப்பட்டிருப்பதாகவும் அதனை காரணம் கூறி பாடசாலையில் சங்க பொதுக்கூட்டத்தினை நடாத்துவதாயின் அதிபரை தலைவராக்க வேண்டும் என்ன வற்புறுத்தியதால் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவுள்ளதாக...

யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று மாலை, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை மாற்றத்திற்கான கோரிக்கையினை சம்பந்தர் நிராகரித்தார். அமைச்சர்களும் முதலமைச்சரும் திறமையானவர்கள் . வினைத்திறனின்மைக்கு அரசியலமைப்பின் 13 ம்...

இம் முறை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் யானை சவாரி மற்றும் மாட்டு வண்டி சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருகங்களை வதைக்கும் ஒரு விளையாட்டாக இதைக் கருதுவதால் இதனை தடை செய்யக்கோரி பொலிஸ் நிலையங்களில் சுற்றரிக்கை வெளியிடப்பட்டமைக்கு அமைவாக குறித்த விளையாட்டினை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தடையினை...

பருத்தித்துறைப்பகுதி மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மாசடைந்த நீர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நீரினை நேரடியாக பலர் பயன்படுத்துகின்ற நிலையில் அதனை பயன்படுத்தும் மக்கள் வீட்டில் வடிகட்டிய பின்னர் வடிகட்டியினுள் எஞ்சும் நீர் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. குடிநீர் என்று குழாய்கள் மூலம் கட்டணத்திற்கு அரசினால் விநியோகிக்கப்படும்...

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவதோடு, செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, கபீர் கசீம், சுதர்ஷனி பிரணாந்து பிள்ளை, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா...

எகிப்த்தின் உள்நாட்டு பயணிகள் விமானம் MS181 கடத்தப்பட்டுள்ளது. அலக்சாண்டிரா வில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானமே கடத்தப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட விமானம் தற்போது சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த Airbus 320 ரக விமானத்தில் 81 பயணிகள் இருந்ததாக எகிப்தியன் ஏயார் நிறுவனம் கூறுகின்றது. விமானியிடமிருந்து கட்டுப்பாட்டறைக்கு கிடைத்த தகவலின் படி வெடிக்கும் பட்டியணிந்த பயணி...

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு...

''சித்திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிப்போம்'' என வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர். வலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில்இ யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி...

ejaffna இணையத்தளம் இன்று முதல் Anroid Mobile Apps ஆக Google Play Store இல் பெற்றுக்கொள்ள முடியும்.இதன்மூலம் ஒவ்வொரு தடவையும் தள முகவரியினை தேடிக்கொண்டிராமல் யாழ் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இணைப்பு இதோ https://play.google.com/store/apps/details?id=com.weJaffna

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினதும் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று நல்லுாரில் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையிமுக்கிய பொழிப்பு வருமாறு *தமிழ் தேசத்தின் முடிவு 2009 இல் நடைபெறவில்லை அதன் முடிவு 2016 இல்தான் எழுதப்படுகிறது! அதுகுறித்து அக்கறைகொள்ளவேண்டும் *எண்ணிக்கை முக்கியமில்லை...

இனி பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சையின் மூலமே வேலை என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது . இலங்கையில் அரசாங்க சேவைக்கு ஆரம்ப காலத்தில் பட்டதாரிகள் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அதேவேளையில், அதன் பிரகாரம், 1964 ஆம் ஆண்டு வரை பட்டதாரிகள் சகலருக்கும் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்காக பட்டதாரிப் பயிலுநர் முன்மொழிவுத்...

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக விசாரணை கோரி மாகாண சபையில் கூட்டமைப்பின் புளட் உறுப்பினர் லிங்கநாதனால் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (9) நடைபெற்றது. அதன்போது, இரணைமடு நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பார்த்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான...

நேற்று நடந்த சம்பவம் மகிழ்ச்சி தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம் சிறிய விடயமாக இருந்தாலும் சிங்கள தமிழ் சகோதரத்துவத்தில் வேறுபாடுகளுக்குள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது சிங்கள சகோதரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(5) பௌத்த விகாரையில் வழிபாடுகளை...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டில் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களில் மீண்டும் உங்கள் அனைவரையும் இந்த இடத்தில் சந்திப்பதில் தமிழ் மக்கள் பேரவை பெருமகிழ்ச்சி அடைகிறது.அதிலும் குறிப்பாக , எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வரைபு வரைதல் எனும்...

தமிழ் மக்கள் பேரவை எந்தக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம்பெறாது என வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவாதம் வழங்கியதன் பின்னரே தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு மக்களுக்கு வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்கிறேன். தமிழ் மக்கள் புத்திஜீவிகள் தமிழ் மக்கள் சார்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மையளிக்கும் அரசியல் வழிமுறையை முன்வைப்பதனை பிழையான...

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான...

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை...

All posts loaded
No more posts