- Sunday
- February 23rd, 2025

இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு நிரந்தர நியமனம் வேண்டி யாழ் மாநகரசபை தொழிலாளிகள் கடந்த ஏழுநாட்களாக போராடிவருகின்றனர். இவர்களது இந்த போராட்டமானது சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நியாயமான தீர்வொன்றினை வழங்குவதற்கு மாநகரசபையும் மாகாணசபையும் இதய சுத்தியுடன் முன்வரவேண்டும் என எமது ஊழியர்சங்கம் விரும்புகின்றது. மாநகரசபையில் சுத்திகரிப்பு மற்றும் வேலைப்பகுதி ஆகியதுறைகளில் ஏழு...

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத காரணத்தால், சுவிட்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்புவது சரியாக இருக்காது என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனிற்றா சொமறுகா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், சுவிட்ஸர்லாந்தில் இருந்து ஈழ அகதிகளை நாடுகடத்துவது தொடர்பிலேயே தமது விஜயத்தில் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக...

மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டோனோமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின்...

(நேரடி செய்தி அறிக்கை ) மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசின் “இலங்கை அரசியல் யாப்பு (1931-2016)” நூல் வெளியீடும் ஆய்வும் இன்று(01.10.2016) சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையினை பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களும் , வரவேற்புரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை...

ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை 9.00 மணியளவில், யாழ். ராஜா கிறீம் ஹவுஸ், சரஸ்வதி மண்டபத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் தலைமையில்...

எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, 'எழுக_தமிழ்' பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!...

இன்று காலை ஆரம்பித்துள்ள எழுக தமிழ் பேரணியை எம் புலம்பெயர் சமூகமும், சர்வதேசமும் பார்ப்பதற்காக நேரடி ஒளிபரப்ப மேற்கொள்ளப்படுகின்றது. காணொளிகள் : Tamilkingdom ,Vanavil , Alex

எதிர் வரும் சனிக்கிழமை 24-09-2016 அன்று நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள், நலன்புரி சங்கங்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்கி எமது உரிமைகளுக்கு உயிரூட்டும் வண்ணம் பேரணியில் கலந்துகொண்டு "எழுக தமிழ்" எழுச்சி பெற அனைவரும் ஒன்றுதிரள்வோமென வடமகாணசபை அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த...

எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலை மாணவர் பீடங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2015-16 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய 2016-17 ஆண்டுக்கான ஒன்றியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கலைப்பீடம் விஞ்ஞான பீடம் மருத்துவபீடம் ஆகியவற்றின் மாணவர் ஒன்றியங்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வௌியிட்டுள்ளன. அதில் பேதங்களை மறந்து எழுகதமிழ்...

“எழுக தமிழ்!” பேரணிக்கு தமது கட்சியின் ஆதரவு இல்லையென்றும், தாம் அதில் பங்குபற்ற மாட்டோம் என்றும் அந்தப் பேரணியை நடத்தாது நிறுத்திவிடும்படியும் தமிழரசுக் கட்சியினர் தெரிவித்தனர். தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக...

இலங்கையில் 25 மாவட்டங்களில் அதிகளவு மதுபானம் நுகர்வு காரணமாக அதிகளவு வரியை அரச திறைசேரிக்கு வழங்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் இருக்கின்றமை எமக்கு மன வருத்தத்தை கொடுத்திருக்கின்றது. என "போதையற்ற நாடு" எனும் தலைப்பில் யாழில் இன்று(9) ஜனாதிபதி உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றும் போது இந்த நாட்டில் தேவையற்ற பல விடயங்களுக்காக பலரும்...

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல்...

யாழ்.தெல்லிப்பளை மானிடம் இயற்கை வேளாண் பண்ணையில் முதலீடு செய்யுமாறு மானிடம் அறக்கட்டளை சார்பாக அன்புரிமையுடன் வேண்டுகின்றோம். பின்வரும் தெரிவுகளில் ஒன்றின் மூலம் நீங்கள் உதவலாம் . ரூ.ஒரு இலட்சத்துக்கு குறையாத முதலீடு ஒரு வருடத்தின் பின் பங்கு லாபம் ரூ.ஒரு இலட்சம் / 50,000 ஒரு / இரு வருடத்தில் மீளளிக்கும் தொகை வருடம் 25,000...

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு...

இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது. யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை...

முல்லைத்தீவில் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (01.06.2016) திறந்து வைத்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து ஏழு மில்லியன் ரூபா செலவில் இந்த...

Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடும்பெறுவது இதுவே...

புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் இறப்பு உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாக உலகவாழ் பெளத்த மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான புனித வெசாக் போயா தினமானது இலங்கையர்களான எம் அனைவருக்கும் மிகவும் முக்கிய சமய தினமொன்றாக விளங்குகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இலங்கை மக்களுக்கு இப்புனித போயா தினத்தில் வாழ்த்துவதற்கு வாய்ப்புக்...

சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...

All posts loaded
No more posts