- Saturday
- November 23rd, 2024
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவில் நள்ளிரவு வேளையில் மூன்று இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார். தமிழர் தேசத்தின் இளைஞர்கள்...
அன்புடன் தமிழ் மக்களுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்த முடியாது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக கட்சிக்காக அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை...
இன்று மாலை 6.05 அளவில் தாயகம் எங்கும் பரவலாக மாவீரர் துயிலுமில்லங்களிலும் பொது இடங்களிலும் இல்லங்களிலும் ஈகைத்தீபம் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு https://www.facebook.com/shritharanmp/videos/667012260126208/ (Video)...
தமிழ் மக்கள் பேரவையானது எமது மக்களின் பிரச்சினைகள் குறித்தான வெளிப்படையான உரையாடலை இலங்கைத்தீவின் அனைத்து இன மக்களுடனும் நேரடியாகவே மேற்கொள்ளும் தனது முடிவை செயல்வடிவில் முன்னெடுக்கத்தொடங்கியுள்ளது . "வடக்கு தெற்கு உரையாடல்" எனும் தொனிப்பொருளில் தெற்கு மக்களுடனான நேரடிதொடர்பாடலை அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து உள்ளது . அதன் ஒரு அங்கமாக 22/11/16 அன்று கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் பத்திரிகையாளர்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆவா குழு சந்தேக நபர்களான இளைஞர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என மொழிகள் மற்றும் சகவாழ்வு நல்லிணைக்க அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இம்முடிவு சற்று முன்னர் கூடிய ஐதேமுன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் இன்று காலை,...
யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக அச்சுறுத்தி சென்றுள்ளனர் . இன்று(23) அதிகாலை 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவன் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த பொலிஸார் இப்படி ஒரு கொண்டாட்டமும் இனி கொண்டாட முடியது எனவும் அப்படி செய்தால் சுடுவோம் எனவும் அச்சுறுத்தி சென்றுள்ளதோடு சில...
'வடக்கு-தெற்கிற்கான உரையாடல்' என்ற தொனிப்பொருளில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்களவர்களின் மனதில் வைராக்கியம் உள்ளது. இதனால் தான் வடக்கில் உள்ளவர்கள் எதை செய்தாலும் குறை கூறுகின்றார்கள். சொந்த காணியில்...
இன்று(22) கொழும்பில் நடைபெற்ற வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன் அவர்களின் உரை வருமாறு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில், பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அதன் செயற்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி விளக்கமளிப்பதற்காக நாம் இங்கு...
கடந்த மாதம் 20 திகதி காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் பெற்றோர், பல்கலை மாணவர்கள். உபவேந்தர் மற்றும் பல்கலை விரிவுரையாளர்களை ஆகியோரை சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் இன்று (21)சந்தித்துள்ளார். யாழ் பல்கலைகழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது...
பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்துள்ளார். அத்துடன், தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவாவது கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அவர்களது...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின் இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுராட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு இன்று அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும்...
இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள் வாங்கப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி என்பது கிடைக்கப் போவதில்லை என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் பரோனஸ்அனெலியிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும்,...
இன்று(5) யாழ் இலங்கைவேந்தன் கலைக்கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் கூட்டமைப்பினை உடைப்பது எனது நோக்கமல்ல.என்னால் தமிழ்கூட்டமைப்பின் ஒற்றுமையினை சீர்குலைப்பதாக சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இது சில தனிப்பட்டவர்களின் கருத்தாக இருக்கலாம்.பல்லாயிரம்...
எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்துள்ளது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. இது...
முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் என இன்று(5) ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் முதலமைச்சராக விக்கினேஸ்வரனை தெரிவு செய்ய கூட்டமைப்பு ஏகமனதாகவே முடிவு செய்தது . மாவை...
படைத்துறை தொழிலுக்கு தொடர்பில்லாத பல தொழில்களை இராணுவம் செய்வது தொடர்பில் இறுதி முடிவு தேவை என அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை. வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக...
நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டி சமயப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளப்போவதாக வட மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாளை (2) நல்லூர் ஆலய முன்றலில் 1008 தேங்காய்கள் உடைத்தும் பெரியன்னை தேவாலயத்தினில் மெழுகுதிரி ஏற்றியும் பிரார்த்தனை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். யாழ்.ஊடக அமையத்தில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டம் மத்திய அமைச்சர் சுவாமிநாதன் உடனான பேச்சுவார்த்தைகளின் பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து மதியம் 12.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்....
Loading posts...
All posts loaded
No more posts