- Sunday
- February 23rd, 2025

வடமாகாணசபையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்கும் முகமாக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களின் விடுப்பு தொடர்பாக அவர்கள் விசாரணைகளில் தடைகளை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை தந்தால் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக நேற்றைய தினம் இரா சம்பந்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த சம்பந்தன் அவ்வாறான உத்தரவாதத்தை எப்படி தன்னிடம் கேட்க முடியும் அதனை...

கூட்டுறவு அமைப்புக்கள் பலவற்றின் மில்லியன் கணக்கான நிதி கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தில் வைப்பிலிட்ட போது அதன் தலைவராக இருந்த சீ.வி.கே பொதுச்சபையின் தீர்மானமின்றி தன்னிச்சையாக மில்லியன் கணக்கில் பிரமுக வங்கியில் வைப்பிலிட்டார். அவ் வங்கி திவாலாக மத்திய வங்கி சுவிகரித்து கொண்டது. தற்போதைய நிலவரப்படி அவ்வாறு வைப்பிலிட்ட அமைப்புக்களின் நிதியை மீளச் செலுத்த 13...

முதலமைச்சருக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை குறித்து மாகாணசபை உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு வழங்கிய கடிதம் எமது செய்தித்தளத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பிரதி முதலமைச்சருக்கும் அவர் வழங்கியிருந்தமை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களால் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட் பிரேரணை தொடர்பில் முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால் வழங்கப்பட்ட விளக்ககடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில்...

தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மகாண சபை முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைணைக் கண்டித்தும், முதலமைச்சருக்கான தங்கள் பேராதரவை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழ் மக்கள்...

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக வினாவியபோது பா.உ சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன் சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான...

அவைத்தலைவர் தலைமயிலான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து ஆளுனர் முதல்வரின் பலத்தை நிரூபிக்குமாறு கேட்டிருந்தார் இதுவரைக்கும் முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என அறியவருகின்றது.இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது...

இன்று காலை அமைச்சர் ஐங்கரநேசன் முதல்வர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க இராஜினாமா செய்வது தொடர்பில் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் அமைச்சருடன் மனந்திறந்து பேசியுள்ளார். அதன்போது அமைச்சர் ஐங்கரநேசன் தான் அவருக்கு தனது ஆதரவினை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்திருந்திருக்கிறார். இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக்...

வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு 96 வது அமர்வு இன்று காலை ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார் அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார் அதன்பின் தன்னிலை விளக்கம் வழங்கும்போது எதுவித...

இன்றைய சிறப்பு அமர்வில் விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் மிக நேர்த்தியாக மறுதலித்துள்ளார். விசாரணையின்போக்கினை துல்லியமாக உடைத்துதெறிந்து நீதிபதிகளுக்கு சட்டம் குறித்தும் நீதி குறித்தும் நடுநிலை குறித்தும் மிக காட்டமான பதிலடி கொடுப்பதாக அவரது விளக்க அறிக்கை அமைந்துள்ளது முக்கிய சாரம்சம்சங்கள்...

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார் மேலதிகமாக தமிழரசுக்கட்சி...

நாளை(14) வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தன்னிலை விளக்கம் வழங்க உள்ளனர். அதன்பின் முறைப்படி தங்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமைச்சர் குருகுலராஜா அவர்கள் இராஜினாமா செய்யப்போவதாக கட்சித்தலைமைக்கு அறிவித்திருக்கின்ற...

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக இங்கே தரவிறக்கம் செய்யலாம் NPC_Inquiry_Report

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் , அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை உறுப்பினர்களுக்கு கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கையின் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளது. குற்றச்சாட்டுக்களை சபையிலும் விசாரணைக்குழுவுக்கும் எழுத்து மூலம் சமர்ப்பித்த...

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு.. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட...

வவுனியாவில் இன்று(11) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது ஐநாவின் முன்னைய தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி,ரெலோ,புளொட் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இத் தீர்மானத்தில் உடன்படாது ஈ.பி.ஆர்.எல்.எப் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.அந்த அடிப்படையில் ஐநாவில்...

ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே. உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனையும் அவர்களது கூட்டதினரையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லாவிடில் தமிழ் இனத்திற்கு எவ்வாறான...

அரசியல் தீர்வானது தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டித்தீர்வு அமைய வேண்டும், அந்த இலக்கை நோக்கி எமது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது. கட்சியின் வருடாந்த தேசிய மாநாட்டு பிரகடனம் நேற்று வௌியிடப்பட்டது. குறித்த பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது....

"இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார். இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார். அரச...

All posts loaded
No more posts