தேர்தல் முடிவுகள் !

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் : யாழ் மாவட்டம் (நன்றி:  வாகீசம் இணையம்) கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது. பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக்...

வடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்.  வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78% மன்னார்: 80% வவுனியா : 70% திருகோணமலை : 85%...
Ad Widget

சுமந்திரன்போல் எனக்கு காக்கா பிடிக்கத் தெரியாது !! என் மீதான குற்றச்சாட்டை ஒருமாதத்துக்குள் நிரூபிப்பாரா ? மணிவண்ணன் சவால் !!

நான் ரவி கருணாநாயக்கவிற்கு காக்கா பிடித்து எனது வாகனத்தை வரியின்றி இறக்குமாதி செய்ததாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நான் சுமந்திரனுக்கு சவால் விடுகின்றேன் எனது வாகன இறக்குமதி தொடர்பில் நான் ரவி கருணாநாயக்கவிடமோ அல்லது யாரேனும் அமைச்சரிடமோ தொடர்புகொண்டிருந்ததாக ஒரு மாத காலத்துக்குள் சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் இந்த அரசியலில் இருந்து...

ரட்ணஜீவன் கூலின் bigdeal பற்றி தேர்தல் ஆணைக்குழு விசாரணை நடத்த பணிப்பு.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இந்த வழக்கிற்கு பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் நேர்மைத்தன்மையில் சந்தேகம் வெளியிட்ட நீதிபதி, அவர் எழுதிய...

இரட்ணஜீவன்  ஹுல் பத்திரிகை வெளியீடுகள் பக்கச்சார்பானவை -தமிழ்த்தேசிய பேரவை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன்  ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 17.01.2018 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் பற்றித்  தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் '”நாங்கள் ஒன்றை...

தேர்தல் ஆணைக்குழு அதிகாரி பக்கச்சார்பானவர்- சட்டத்தரணி மணிவண்ணன் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி...

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை...

“யாழ் 2020 :நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு

யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 - நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் இன்று (06.01.2018) சனிக்கிழமை நண்பகல் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த “யாழ் 2020” செயற்றிட்ட வரைபடத்தை வெளியிட்ட தமிழ்த்தேசிய...

கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார். -செ.கஜேந்திரன் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்தால் அவர் தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற நிலை இருந்தது. அது விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல் கோரிக்கையை ஒரு பயங்கரவாதக் கோரிக்கையாக சித்தரிக்க முடியாமல் போய்விடும், புலிகளையும்...

நாங்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல ! நெகிழச் செய்த வயதான பெண்மணி

நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர் மக்கள் நடக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பேரவையின் ஆதரவாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் விளக்கக் கூட்ட நிகழ்வென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்....

தமிழ்த்தேசிய பேரவை வேட்பாளர்கள் நல்லைக்குருமணிகளிடம் ஆசி பெற்றனர்!

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 09.30 மணியளவில் யாழ் சின்மயாமிஷன் சுவாமிகள்...

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் யாழ் ஆயரிம் ஆசிபெற்றனர்

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று...

தேரரின் தகனக்கிரியைக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி. நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க மறுப்பு!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சட்டத்தரணி மணிவண்ணன்  மற்றும் 12 சட்டத்தரணிகள்...

சுமந்திரனின் கருத்துக்கு அரச மருத்துவர் சங்கம் பதிலடி

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அரச...

சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்!

அமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள்  அமைச்சர்ராகவும்  அனந்தி சசிதரன்  புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம்  மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். முதலமைச்சர் விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல்...

கல்வி அமைச்சருக்காக தமிழரசுக்கட்சி ஆர்னோல்டை முன்மொழிந்துள்ளது.

வடக்கு மாகாணசபை விவாகரத்தில் பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கான புதிய தெரிவு இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அவ்விரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் தனது பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராாவை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்துரையாடியிருந்தார் இன்றைய தமிழரசுக்கட்சிக்கூட்டத்தில் ஆர்னோல்ட் அவர்கள் கல்விஅமைச்சுக்கான தெரிவாக முன்மொழியப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது....

மக்கள் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் அவர்களின் விளக்கம்

வடமாகண சபை குழப்பத்தின் பின்னணி என்ன? 25.06.2016 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் அவர்களின் விளக்கம்

அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம்

வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். முதலமைச்சரால் முன்னதாக...

அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது .

வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில்...

நாளை முதலமைச்சர் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை தம்வசம் எடுத்துக்கொள்கிறார்.

முதலமைச்சர் அமைச்சுப்பதவிகளை தியாகம் செய்யுமாறு  கேட்டுக்கொண்டதற்கிணங்க  தமது இராஜினாமா கடிதங்களை விவசாய, மற்றும் கல்வி அமைச்சர்கள் ஒப்படைத்துள்ள நிலையில் நாளை (21) முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அந்த இருஅமைச்சுக்களையும் தம்வசம் எடுத்து ஆளுனர் முன் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். குறித்த அமைச்சுக்கள் யாருக்கு வழங்கப்படும் என்பதில் ஊகங்கள் வெளிவந்தகொண்டிருந்த நிலையில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக முதலமைச்சர்...
Loading posts...

All posts loaded

No more posts