- Saturday
- February 22nd, 2025

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர், வரதராஜன் பார்த்திபன் நேற்றைய(18.07.2019) மாநகரசபை அமர்வில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 6 அதிகார சபைகளில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதற்கு அப்பால் பல முரண்பாடுகள் அதில் காணப்படுகின்றன வைகாசி மாதம் இடம் பெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் கம்பத்தில்...

இன்று காலை 11.30 மணி முதல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் எம்பிக்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை...

https://www.facebook.com/VishnuTNPF/videos/773120919752637/ https://www.facebook.com/VishnuTNPF/videos/445845889302341

வெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 18.07.2019 வியாழன் காலை 09 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஏற்பாடு செய்திருந்தது யாழ் மாநகரசபை முன்பாக இடம்பெறும் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் கலந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். மாநகரசபை...

எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125...
“இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது. எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று...

கல்முனை தமிழ் (வடக்கு) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமாக பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதால் இது தொடர்பிலான ஆவணங்களை வெளிப்படுத்துகிறேன் என்று கூறி சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் சில ஆவணங்களை வெளியிட்டிருக்கிறார். ஜூலை 10, 11 ஆம் திகதியிடப்பட்ட கடிதங்கள் முறையே நிதி அதிகாரம் வழங்குவதும், கணக்காளருக்கான ஆளனி அனுமதியுமாகும் என அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத்...

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு சனிக்கிழமை (06.07.2019) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியத் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு பொ.ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கு...

தமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது. இவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று...

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக...

அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பாராளுமன்றில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான சிறப்பு நிபுணர் குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதங்கள் தொடர்கின்றன. இடைக்கால அறிக்கை, ஆறு உபகுழு அறிக்கைகள், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பை ஆராய்வதற்காக வழிப்படுத்தும் குழுவினால் உருவாக்கப்பட்ட நிமித்த உபகுழு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வழிப்படுத்தும் குழுவிற்காக...

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) பாராளுமன்றில் தெரிவித்தார் இராணுவம் மற்றும் புலிகள் இருதரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர் என சர்வதேச அறிக்கையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்த அவர் இதைத்தெரிவிப்பதற்காக என்சார்ந்த சமூகம் என்னை கடுமையாக சாடும் ஆனால் எல்லாத்தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தன என்பதே உண்மை...

சனாதிபதி இன்று நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரை வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய...

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் உன்றுக்கு தமிழ்மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை...

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபைஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் மகஜர் கையளிக்கப்பட்டது கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக ...

இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த...

யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது. இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை பகிரங்க வாக்கெடுப்பு...

யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி...

All posts loaded
No more posts