- Thursday
- November 21st, 2024
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நெருக்கடி காரணமாக...
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின்...
இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவர்களில் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்தநிலையில், அவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரச செலவுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். தடுப்பூசி, சுகாதாரத் துறையில் கூடுதல் செலவுகள் மற்றும் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தொடர்ச்சியான செலவு மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம் என்று அமைச்சர் அமைச்சரவைக்கு...
கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே...
வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விபத்தினால் மூளைச்சாவடைந்து இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்ற இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு நோயாளிகளுக்கு தலா ஒன்று என மாற்றப்பட்டன. சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கும் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களை விட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 8.1 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர்...
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து...
21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை...
நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 பரவல் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளும், நேற்று புதன்கிழமை முதல் மே 31 ஆம் திகதி வரை இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி...
நாட்டில் ஊரடங்கு அமுலில் இருள்ள காலப்பகுதியில் எக்காரணங்கள் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கடுமையாக ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. திறக்கப்பட்ட மருந்தகங்கள் , பலசரக்கு கடைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான செயலணி...
ஊரடக்கு வடக்கில் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ஆளுனரின் பணிப்பில் அரசாங்க அதிபர்கள் கட்டளைத்தளபதி பொலி அதிகாரிகள் சுகாதரத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று...
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான வட்டியை 6 மாதத்திற்கு நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் மத்திய வங்கியால் வழங்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020 வரை...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே இவ்வாறு கொரோனா (COVID -19) தொற்று உள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை...
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து வட மகாகாண மருத்துவர் மன்றம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று பல உலக நாடுகளில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில் தற்போது எமது நாட்டிலும் தொற்றுகள் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கள் பெருமளவில் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு அனைத்துத் தரப்புக்களினதும் பங்களிப்பு மிக அவசியமானது. தொற்று நோய்...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டத்தில் தமிழ் தேசம் என வரும் இடங்களில் அதையெல்லாம் விக்கினேஸ்வரன் வெட்டி அகற்றியுள்ளார். தமிழ் தேசம், இறைமையை ஏற்பதாக விக்னேஸ்வரன் சொன்னதன் அடிப்படையில்தான் நாம் பேரவைக்குள் வந்தோம். பின்னர், தேசத்தை ஏற்க மாட்டேன் என நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் உள்ளது. தேசத்தை ஏற்க மாட்டேன் என அவர் சொன்னதால்தான் நாம்...
நடைபெற்று முடிந்த சனாதிபதித்தேர்தலை அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாற்றணி அரசியல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி முயற்சிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இணைவில் ஏற்பட்ட முரண்பாடுகளுடன் அமைதியாகியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சனாதிபதித்தேர்தலில் அனைவரது கவனமும் குவிந்திருநதது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்த நிலையில் வடக்கு...
வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள்...
Loading posts...
All posts loaded
No more posts