நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டி 2016

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் மற்றும் பாரதி விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ் இணைந்து நடாத்தும் நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டி 2016 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .ஈழத்தில் வசிப்பவர்கள் அனுமதிப்பணமாக 50 யூரோ செலுத்த வேண்டியதில்லை. பணப்பரிசுகளை பெற்றால் மட்டும் 50 யூரோ செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியானது ஈழத்து கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன்...

யாழில் மத்திய கலாசார நிலையம் திறந்து வைப்பு

யாழ். ஒல்லாந்தர் கோட்டைக்குள் மத்திய கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கட்டிடம் அமைப்பதற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் நேற்று இடம்பெற்றது. மத்திய கலாசார நிலையத்தினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார். கல்வி அமைச்சு, தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிலையம் ஆகியனவின் ஏற்பாட்டில்...
Ad Widget

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி...

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் முகச்சவரம் (கிளீன் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள்...

தமிழ் கலாச்சாரத்தை கற்று செல்லுங்கள் -சிங்கள மக்களுக்கு இராணுவ சிப்பாயின் அறிவுரை!!

நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். “30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில்...

யாழில் சைவசித்தாந்த, திருமந்திரப் பயிற்சி நெறி

அகில இலங்கை சைவ மகா சபை, இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் அனுசரணையுடன் சைவ சித்தாந்தம் மற்றும் திருமந்திர பயிற்சி நெறியை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற சைவ மகா சபையின் பிரதிநிதிகள் தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களின் குரு முதல்வர்களுடன் கலந்துரையாடியதன் பேரில் யாழ்ப்பாணத்தில் இந்தப் பயிற்சி நெறி...

தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு!

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் ஜீன்ஸ், பெண்கள் ஸ்கர்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அந்த வழக்கில் கடந்த...

தம்முடன் புகைப்படம் எடுப்பதை விரும்பாத இலங்கை ஆதிவாசிகள்!

'செல்பி' மோகம் பட்டிதொட்டியெங்கும் பரவிவருகிறது. எங்கு சுற்றுலா சென்றாலும் 'செல்பி' எடுப்பதற்கே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த 'செல்பி' மோகத்துக்கு இலங்கையின் ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தங்களைப் பார்வையிடுவதற்கு வருபவர்கள் தமது வரலாறு, கலாசாரம் என்பவை பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றும், மாறாக, புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் ஆதிவாசிகளின்...

வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையின் பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும்

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் எதிர்வரும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்டம் தும்பளை நெல்லண்டை அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முதலமைச்சரின்...

யாழில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

யாழ் முற்றவெளி அரங்கில் காலையில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் தமது ஹஜ் பெருநாளின் விசேட தொழுகையை மேற்கொண்டதுடன் தமது உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா். ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டியும் பிரார்த்திக் கொண்டனா். ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தளர்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு...

யாழில் போரா முஸ்ஸிம்களின் பள்ளிவாசல் திறந்துவைப்பு

யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் போரா முஸ்ஸிம் இனத்தவர்களின் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முதற்தடவையாக போரா முஸ்ஸிம் இன உலகத்தலைவர் செரன முகியதீன் சையூதீன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தார். அவர் இன்று யாழ் ஆஸ்பத்திரி வீதியில் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போரா முஸ்ஸிம் பள்ளிவாசலை திறந்து வைத்தார். இப்பள்ளிவாசல்...

ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை இராதாகிருஷ்ணன் நல்லைக்கந்தன் திருவடியில் இன்று காலமானார்.

இன்று (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும்...

மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த...

தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரல்

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எமது கலை இலக்கியங்களில் சமகால நிலைமையினை மதிப்பிடுவதும் எதிர்காலத்துக்கான செயல்நெறியினை இனங்காண்பதையும் நோக்காகக்கொண்டு ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. 'ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் உலகமயமாதல் உள்ளூர் மயமாதலும்' என்ற கருப்பொருளிலே ஆய்வுக்...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு பழைய மாணவர் சங்கம் வழங்கும் நாடக விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கலை ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒன்றினைவில் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை தலைநகரில் வெகு விமர்சையாகவும், கலை இலக்கியங்களை வளர்க்கும் முகமாகவும் நடாத்த பட்ட இசை, நாட்டிய மற்றும் பட்டிமன்ற நிகழ்வுகள் கலை ஆர்வலர்கள், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றமையை...

யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமாகியது இந்து ஆராய்ச்சி மாநாடு

அகில இலங்கை இந்து மன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் இந்து ஆராய்ச்சி மாநாடு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நல்லை ஆதீன முதல்வர், இந்தியாவின் தர்மபுரி ஆதீன குருமுதல்வர் ஸ்ரீமத் மௌனகுமார தம்பிரான் சுவாமிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக பேராசிரியர் கோபால...

இந்துவின் முத்தமிழ் மாலை நிகழ்வில் பார்வையாளரை பெரிதும் கவர்ந்த உள்ளுர் கலைஞர்கள்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் 125 வது ஆண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம்  முற்று முழுதாக உள்ளுர் கலைஞர்களினை கொண்டு பிரமாண்டமாக நடாத்திய கட்டணத்துடன் கூடிய முத்தமிழ் மாலை 2015 நிகழ்வு பார்வையாளரினை பெரிதும் கவர்ந்ததுடன் அவர்கள் கலைஞர்களையும் பாராட்டிச்சென்றனர். 11.7.2015 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கல்லுாரியின் புதிதாக...

தமிழ் கலைஞர்கள் மனு: ஊடக அமைச்சுக்கு கட்டளை

சினிமா படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் வழியாக புறக் கலாசாரங்கள் பரவுவதை எதிர்த்து தமிழ் கலைஞர்கள் சங்கம் தாக்கல் செய்த உரிமைகள் மனு தொடர்பில் ஜூலை 11ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு வெகுஜன ஊடக அமைச்சுக்கு உயர்நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை கட்டளை அனுப்பியுள்ளது. இந்த வழக்கை, மேலும் நியாயப்படுத்துவதற்கான திகதியாக ஜூலை 11ஆம் திகதியை உயர்நீதிமன்றம்...

வடமாகாணத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு போதாது

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், வடமாகாண மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றது. புற்றுநோய் பற்றிய அறிகுறிகள் தோன்றினாலும் அதை உடனடியாகச் சென்று வைத்தியர்களுக்கு காட்ட நாங்கள் தாமதிக்கின்றோம். அதனால் நோய் நன்றாக முற்றிப்போகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினர். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை...
Loading posts...

All posts loaded

No more posts