தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு! கைவிஷேட நேரங்கள் 

புதுவருஷ கைவிஷேட  நேரங்கள் குரோதி வருஷ கைவிஷேட நேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை முதல் நாள் (14/04/2024) ஞாயிற்றுக்கிழமை பகல் 7.57 ல் இருந்து 9.56 வரையிலும் அதே நாள் 9.59 ல் இருந்து 12.01 வரையிலான நேரமும் அதே நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் மாலை 6.17 ல் இருந்து 8.17 வரையிலான காலமும்...

கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம்...
Ad Widget

வடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன்

வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து...

நாடளாவிய ரீதியில் களைக்கட்டியது தைப்பொங்கல் வியாபாரம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை (சனிக்கிழமை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், வடக்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைக்கட்டியுள்ளது. யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை...

பிள்ளைகளை இரக்கமுடையவர்களாக வளர்க்க வேண்டும்

இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன் சண்டைக்குத் தான் செல்வார்கள். இப்படியான உலகத்தில் வாழும் பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உடையவர்களாக வளர்க்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவோம். இவ்வாறு யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக் கொண்டார்....

தமிழர் தாயகத்தில் ஏராளமான பௌத்த தொல்பொருள் இடங்கள்!! பாதுகாக்க நடவடிக்கை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏராளமான தொல்பொருள் ரீதியில் பெறுமதி மிக்க பௌத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்கப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரை அமர்த்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள பௌத்த தொல்பொருள் இடங்களை தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து அழித்து வருவதாக பொதுபல சேனா உட்பட...

தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கிய சிங்கள மொழி அரச உத்தியோகத்தர்கள்

கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் இருதி நாள் ஒரு தமிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான...

1.2 பில்லியன் ரூபா செலவில் யாழில் கலாச்சார மண்டபம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நூலகத்துக்கு அருகாமையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு...

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப் போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஓரினச் சேர்க்கை திருமணம் நாட்டின் கலாச்சாரத்திற்கு பொருந்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில்...

களியாட்டங்களை தவிர்க்குமாறு கோரிக்கை

நத்தார் விழாவில், போலிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான நத்தார் மரம் தொடர்பிலும் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 'நத்தார் விழா' எனக் கொண்டாடப்படும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது, ஒரு நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். வெளிப்புற கிறிஸ்மஸ் அலங்காரங்கள், உச்ச அளவில் விளம்பரப்படுத்தப்படும் போலித்தனமான களியாட்டங்கள்...

திருவாசகம் சிங்களத்தில்! நல்லூரில் வெளியீடு!

சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது. ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி...

ஹோலிப்பண்டிகை நடாத்த யாழ் மாநகரசபை அனுமதி மறுப்பு! எதிர்ப்புக்களை அடுத்து ஆணையாளர் முடிவு!

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்திருந்தது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டு இறுதியாக...

கேலிக்கூத்தாகிய சூரன் போர்கள்!

இந்து ஆலயங்களில் குறிப்பாக முருகன் ஆலயங்களில்  கந்தசஷ்டி விரத முடிவு நாளில் சிறப்பாக சூரன் போர் நிகழ்வு நடைபெறுவது வழமை. இலங்கையின் சில ஆலயங்களில் நவீன மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இது சென்ற வருடமும் இலங்கையின் தென்பகுதியில் இடம் பெற்றிருந்தது தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தேவர்களை துன்புறுத்திய சூரனையும் அவன் சகோதரனையும்...

யாழ் . முஸ்லிம் கலாசார நிகழ்வு 2016

யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் என்னும் கருப்பொருளில் முஸ்லிம் கலாசார நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத்தினரோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த கலாசார நிகழ்வின் பிரதம...

ஜனவரியை தமிழ் கலாச்சார மாதமாக கனடா அரசு அறிவிப்பு

ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283) அமோக ஆதரவு அளித்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அனைவரது கை தட்டல்களுக்கு...

யாழ் பண்பாட்டுப்பெருவிழா

யாழ் பண்பாட்டுப்பெருவிழா சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை நடத்துகின்றன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், யாழ்...

யாழில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் கலாச்சார நிலையம்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கிணங்க யாழ் மாவட்டத்தில் கலாச்சார மண்டபத்தினை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் ரூபா. 1.7 பில்லியன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு ஏற்ப யாழ் மாவட்டத்தின் கலாச்சார நிலையம் யாழ் பொது நூலகம் மற்றும், புல்லுக்குளம் நீர்நிலையை அண்மித்ததாக இது நிறுவப்படவிருக்கின்றது. இந் நிலையம் வெளி மேடைகளின் மூலம்...

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும் நிலையில், எமது இளைய சமுதாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், எமக்கான கலைகளை வளர்த்து, கலாச்சாரத்தினை பாதுகாத்து, எமது இளைய சமுதாயத்தை சரியான திசையில்...

கந்தபுராண கலாசாரமாக விளங்கிய யாழ். மண் இப்பொழுது காடையர்களின் விளைநிலமாகியது!

கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது என அகில இலங்கை இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தின் இளம் சமுதாயத்தை சீர்கெட்ட பாதையிலிருந்து சீர்திருத்தப் பாதைக்கு கொண்டு வருவதற்கு அறநெறி...

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது...
Loading posts...

All posts loaded

No more posts