Ad Widget

ஆயுதங்களுடன் நின்ற நால்வர் கைது

கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில்...

ஆசிரியரை தாக்கிய யாழ் இந்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிரியரை கடந்த 9ஆம் திகதி தாக்கிய அதே பாடசாலையை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள். இது தொடர்பான...
Ad Widget

மீனவரின் படகை மோதிய கடற்படையினர் 8பேர் கைது

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கியூ.ஆர்.பெரேரா தெரிவித்தார். கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இரவு, எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது,...

திஸ்ஸ அத்தநாயக்க கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க, சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார். அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். நடந்து முடிந்த ஜனாதிபதி...

அங்கஜனின் தந்தை உட்பட 9பேருக்கு பகிரங்க பிடியாணை

வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜனின் தந்தை இராமநாதன், அவரது உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டார். அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டிலேயே...

குடும்பஸ்தர் கொலை : ஐவருக்கு விளக்கமறியல்

யாழ் சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளால், ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டதுடன், அவரது...

ஷிரந்தி ராஜபக்ஷவின் தங்க மோசடி அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷாமலி பெரேரா இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நாட்டின் திறைசேரியில் இருந்த தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

கோப்பாய் பொலிஸ் மீது தாக்குதல்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூன்று சந்தேகநபர்களை வியாழக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கோண்டாவில் பகுதியை சேர்ந்த மருத்துவமாதுவுக்கு மதுபோதையில் வீதியில் நின்றிருந்த மூன்று பேர் தகாத வார்த்தைகளால் பேசி, அவருடை விழிப்புலனற்ற கணவரை கடுமையாகத் தாக்கியதாக...

நகுலேஸ்வரன் கொலை வழக்கு: 4 பேர் விடுதலை! கிராம அலுவலர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில்...

இளம் குடும்பஸ்தா் குத்திக்கொலை

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை(20) இரவு 11 மணியளவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி எஸ்.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்தார்....

யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இடங்களும் கூட அதிகரித்துள்ளன. கடந்த 14 நாள்களில் 6 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறு தொடரும்...

மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடந்தவருக்கு அபராதம்

ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடந்தவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார். யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பான வீதிக்கடவை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மூடியிருந்த போது பாலாவி பகுதியை சேர்ந்த நபர் கடவையை கடந்து...

தொலைபேசி மூலம் வந்த திருடன் !

யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும்...

மஹிந்தவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர் மீது வாள்வெட்டு

யாழ். கோப்பாய் மத்தி பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தை சேர்ந்த ஏ.சந்திரகுமார் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த...

தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருமலையில் தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...

வேலணையில் பிரசாரம் மேற்கொண்ட கூட்டமைப்பின் வாகனம் மீது கல்வீச்சு!

வேலணைப் பகுதியில் பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைக் கடுமையாக எச்சரித்த கும்பல் ஒன்று, அவர்கள் பயணித்த வாகனத்தையும் கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெத்தினம் தலைமையிலான கூட்டமைப்பு...

நாவாந்துறையில் குழு மோதல்: 9 பேர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை(31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர். யாழ். நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

தேர்தல் விதிமுறைகளை மீறினார் : வடக்கு ஆளுநர்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பரப்புரைக்கூட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் தேர்தல்...

யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்களை கட்டாயப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்கும் குறித்த வாழ்த்துக் கடிதத்தில் கையொப்பம் இடுமாறு துணைவேந்தரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச உத்தியோகத்தவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவது தொடர்பில் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

திசைகாட்டி நிறுவனத்திற்கு தீவைப்பு

கடந்த சில வாரங்களாக பல கோடி ரூபா விசா மோசடி தொடர்பில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி சர்சைக்குள்ளாகியிருந்த விசா வழிகாட்டி நிறுவனமான திசைகாட்டி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த நிறுவனம் நேற்று முன்னிரவு தீயிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த நிறுவனத்தில் பல லட்சங்களை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களால் காவல்துறையில்  பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வழக்குகள் எதுவும்...
Loading posts...

All posts loaded

No more posts