Ad Widget

 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேர் கைது

நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேரை நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2014ஆம்...

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படும்!

ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் விற்பனை செய்தார்...
Ad Widget

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவரிடம் கப்பம் கோரியவர்களுக்கு விளக்கமறியல்

குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த...

சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர் பொலிஸாரால் கைது!

அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர்...

இப்படியும் இங்கே ! நேற்று நடந்த கூத்து

இவர் வித்தியாவிற்கான போராட்டம் என்ற பெயரில் சுழிபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு முன் பிரதான வீதியில் மதுபோதையில் நின்று அட்டகாசம் செய்த நபர். கஸிப்பு குடித்துவிட்டு இரவு 11 மணி வரை போராட்டம் செய்யப் போகிறாராம். வீதியால் எவரும் போக விட மாட்டாராம். வீதிக்கு குறுக்கே கயிறு கட்டி போக்குவரத்துக்களை தடை செய்திருந்தார். விக்டோரியா கல்லூரி ஆசிரியர்களைக்...

 129 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதன்கிழமை(20) ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை வியாழக்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

வித்தியாவின் படுகொலை : சி.ஐ.டி களத்தில் !!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுப்படுகொலை தொடர்பலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விஷேட விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின், கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ். புங்குடுதீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ்...

எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்: வடக்கு முதல்வர் காட்டம்

புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும்.    நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.   ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை...

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

வட்டுக்கோட்டை பெண் கொலையுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

பொன்னாலை வீதி கொத்தாத்துறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமானியம் யோகேஸ்வரி (வயது 34)...

வன்புணர்வில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் மக்களால் நையப்புடைப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும்  பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை வெளியாகியுள்ளது. நேற்று மேலதிகமாக கைதான5 பேர்களில் ஒருவன் வேலணை பிரதேசசபையில் வேலை செய்கிறான். மற்றைய நால்வரும் கொழும்பில் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே கைதான மூவரில் ஒருவனும் கொழும்பில் இருந்து வந்திருந்தான். இவனுடன், இந்த நால்வரும் திட்டமிட்டு இந்த கொடூரத்தை...

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான லெனின் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,ஜெயக்குமார், தவக்குமார்,ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 18...

புங்குடுதீவு மாணவி கொலைச்சந்தேக நபர்கள் கைது

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த மாணவி, இனம்தெரியாத நபர்களினால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார் . இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வி கற்கும் மாணவி ஆவார். இவர் நேற்றுக்காலை வல்லனில் உள்ள தனது வீட்டில் இருந்து, பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை...

புங்குடுதீவில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலம்

யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.    இவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.    புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – மூவர் கைது

13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 40 வயதுடைய சந்தேகநபர், மற்றும் சிறுமியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய சந்தேகநபருடைய இரண்டு மகன்கள் ஆகியோரை வியாழக்கிழமை (07) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 13 வயதுச் சிறுமியின் பெற்றோர் திருமண நிகழ்வொன்றுக்கு கொழும்புக்குச் சென்றமையால் சிறுமியை தாவடி பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு...

மூளாயில் பொலிஸாரால் மூவர் கைது!

பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் உட்பட மூவர் மூளாய் மாவடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்யமுற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத்...

இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் : நால்வர் கைது

சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் நால்வரைக் கைது செய்தனர். ஏனையோர் தப்பியோடினர்....

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (23) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றை வீதியில் கடமையில் இருந்த நெல்லியடி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவ்விடத்துக்கு வந்த பிறிதொரு நபர் தனக்கு நெல்லியடி பொறுப்பதிகாரியை...

வலி.வடக்கில் எஞ்சியவற்றை களவாடும் திருட்டுக் ‘கோஷ்டி’!

வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில்...

பேஸ்புக் குறித்து 3 மாதங்களில் 500 முறைப்பாடு!

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலி பேஸ்புக் கணக்கு குறித்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஏனையவர்களின் கணக்குகளை முடக்கி தரவுகளை மாற்றியமை...
Loading posts...

All posts loaded

No more posts