- Friday
- November 1st, 2024
சுதுமலைப் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நபருக்கு 5 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (03) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரான முதலாவது சந்தேகநபரின் சகோதரன் இந்த வழக்கில் இருந்து விடுதலை...
காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக்...
விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு இராணுவத்தினரின் தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பட்டத்துவ ஆராய்ச்சிஹே...
அச்சுவேலி பகுதியில் அழகு நிலையத்தை நடத்தி வந்த இளம்பெண் மீது வெள்ளிக்கிழமை (03) இனந்தெரியாத நபர் ஒருவர், தாக்குதல் மேற்கொண்டதில் பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த கஜேந்திரன் சிந்துஜா என்ற 21 வயதுடைய பெண் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அழகு நிலையத்தில் தனித்திருந்த பெண் மீது,...
கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 23பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார். மேற்படி சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கொற்றாவத்தை...
பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கல்லூரி ஒன்றின் ஓய்வுபெற்ற பிரதி அதிபரான சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால்...
இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை வழங்கியுள்ளது. 2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இதில் குற்றவாளிகளாக காணப்பட்ட சிவபாலன் கிருஷ்ணகுமார் மற்றும்...
கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைக் கவசத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்திய 12 பேருக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கபட்டது. சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட பரிசோதனையின் போது கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைகவசத்துடன் அணிந்து பயணித்தவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்குகள் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை...
கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் நின்று பாடசாலை மாணவிகளை கைபேசியில் புகைப்படம் எடுத்த இருவரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர். கைதான இருவரும் அளவெட்டி தெற்கு பகுதியினை 21, மற்றும் 23 வதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து...
கோப்பாய் கொலை வழக்கில் பிணையில் சென்ற முதலாவது எதிரியும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினாராம்!
கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை வழக்கொன்றில் பிரதான எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்துச் செய்வதற்கு மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்தில் இரத்தினம்...
யாழ்ப்பாணத்தில் இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சமூக, கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதுடன், சமூக, கலாசார சீரழிவுகளுக்கு இடம் கொடுக்கும் நெற்கபே தடை செய்யப்பட்டு உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சைபர் குற்றச் சட்டம் உடனடியாக யாழில் அமுல் படுத்தப்பட்டு,...
யாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமிகள் மூவரும், சிறுவர்கள் இருவருமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக...
2000ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் 8 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மிருசுவில்...
கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் இன்று காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார்...
ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களின் தங்க நகைகளை அபகரிக்க முற்பட்ட இரு யுவதிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இறுதி நாளான இன்று (24) மதியம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. பூஜை வழிபாட்டின் போது, தென் பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படும் இரு இளம் யுவதிகள்...
2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகியோர் மூவருக்கும் எதிராக சான்று உள்ளதெனவும் இந்தக் கடத்தலில் புலனாய்வுப் பிரிவின் விசேட...
தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்....
யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, மாவா என்ற போதைப்...
வீதியில் பெற்றோல் குண்டுகள், கோடரிப்பிடிகள், பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் கேள்வி அவருக்குப் பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பெற்றோல் குண்டுகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைதான 10...
சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமூகவிரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...
Loading posts...
All posts loaded
No more posts