Ad Widget

வேட்பாளர்கள் வாக்கு கேட்க வீட்டுக்கு வந்தால் வீடியோ செய்து அனுப்புங்கள்!

சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...

யாழ். நீதிமன்றத் தாக்குதல்: 30 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில், ஒருவர் பிணையில்

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பாடசாலை மாணவர்...
Ad Widget

பகீரதி தற்கொலை செய்யவில்லை!!,பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளியினை கைது செய்ய வேண்டும் – அனந்தி

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான ஞானச்சந்திரன் பகீரதியின் (வயது 26) மரணம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணையை மேற்கொண்டு, அது கொலையா அல்லது தற்கொலையா என்று கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். அச்சுவேலியைச் சேர்ந்த மேற்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை; கொழும்பு நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு

வித்தியாவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் வேட்பு மனுத் தாக்கல் செய்வதன் இறுதிநாள் என்றமையால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு அதிகளவான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தேக நபர்களை...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு: சட்டத்தரணி தவராசா விலகினார்?

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கில் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா இனி முன்னிலையாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர் வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர்கள் வித்தியாவின் தாய்க்கும் சகோதரனுக்கும் கொடுத்து வந்த...

அனுமதி பத்திரம் இன்றி மாடுகளை வெட்ட முயன்ற இருவர் கைது : விற்பனையாளர்கள் கடையடைப்பு

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாவாந்துறை,கல்வியங்காடு,பாசையூர்,அரியாலை , சின்னகடை ,பண்ணை ஆகிய கடைகளின் 30 உரிமையாளர்கள் குறித்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கடையடைப்பு தொடர்பில் தெரிய வருவது, இன்று காலை 6.30 மணியளவில் பண்ணையில் அமைந்துள்ள கொள்களத்தில் வைத்து வெட்டதயாராக இருந்த 4 மாடுகளை...

யாழ் நீதிமன்ற தாக்குதல் – 26 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

யாழ்.நீதிமன்ற கட்டிட தொகுதி மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4வது பிரிவினரில் 26 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க.கேசவன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 08 பேர் 5 லட்சம் ரூபா...

உறுதிகேள் எழுத்தாணை மனுவில் இருந்து வடக்கு முதலமைச்சரின் பெயரை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதையும், அந்தப் பதவிக்கான நியமனம் தெரிவையும் உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான உறுதிகேள் எழுத்தாணை மனு ஒன்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் அவசர மனுவாக ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீது இடைக்கால நிறுத்தி வைத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடாசலையின் தற்போதைய...

கஞ்சா நுகர்ந்த பூசகர் கைது

சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...

கொடிகாமம் விடுதியில் கைதான யுவதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

கொடிகாமம் - இராமாவில் பகுதி விடுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட வவுனியா யுவதி உட்பட மூவரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் - கண்டி வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபசாரம் இடம்பெற்றுவருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விடுதியைச் சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார், வரணியைச் சேர்ந்த விடுதியின் உரிமையாளர், வவுனியா...

திருகோணமலையில் மனிதப்புதைகுழி!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்...

மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்

வடமராட்சி கிழக்கு, குடத்தனையிலுள்ள ஆரம்பப் பிரிவு கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 5 மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா புதன்கிழமை (08) உத்தரவிட்டார். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் ஆய்வின் பிரகாரம் பருத்தித்துறை பொலிஸ்...

கொடிகாமம் விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட யுவதி கைது!

கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் யுவதி ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அனுமதி பெறப்படாமல் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் அங்கு சென்ற பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்ட யுவதியைக் கைதுசெய்தனர். வவுனியாவைச்...

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: மற்றொரு சந்தேகநபர் கைதாகி விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குலுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான், இளவாலையை சொந்த முகவரியாகவும், ஏழாலை வடக்கு, ஏழாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணொளி ஆதரங்களுடன் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் என...

முன்னாள் போராளிக்கு பிணை

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த போது திங்கட்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை 75,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (07) அனுமதியளித்தார். அத்துடன், மேற்படி சந்தேகநபர் புனர்வாழ்வு பெற்றாரா, இல்லையா என்பது தொடர்பில் விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையான ஓகஸ்ட்...

கிளிநொச்சி இளம்பெண் வன்புணர்வு வழக்கு: தலைமறைவாகியுள்ள சிப்பாய்க்கு பிடியாணை! இன்ரர்போல் உதவியை பெறவும் உத்தரவு!!

கடந்த 2010ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் எனக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4 இராணுவ வீரர்களில் தலைமறைவாகியுள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் நான்காவது எதிரியாகிய இராணுவ வீரர் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு ஓடியிருந்தால், சர்வதேச பொலிஸார் மூலமாக அவரைக் கைதுசெய்வதற்கு...

முன்னாள் போராளி கைது

அளவெட்டி தெற்கு பகுதியில் புனர்வாழ்வு பெறாமல் தங்கியிருந்த முன்னாள் போராளியை திங்கட்கிழமை (06) இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சக்திவேல் இராஜகுமரன் (வயது 41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து கடவுச்சீட்டு, நிலஅமைப்பு வரைபடங்கள், வங்கிப்புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளை...

திருடனை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்: திருட்டுப்போன நகைகள் திரும்பின

கடந்த சனிக்கிழமை(04) திருட்டு போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- பருத்துறைய பகுதியில் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் இருந்து 35 பவுண் நகையினை திருடி சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

சட்டரீதியாகத் தண்டனை வழங்கும் கிளிநொச்சி நீதிமன்றின் தீர்ப்பில் தலையீடு செய்ய முடியாது!

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு ஒன்றில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும், அதே எதிரிக்கு அங்கு பிணை மனு மறுக்கப்பட்டதையும், மீளாய்வு செய்து அந்தத் தீர்ப்புக்களை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்பணம் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான வழக்கிலேயே...

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயன்றாராம்! முன்னாள் உறுப்பினர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். 119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்பட்ட கட்டளையைத் தொடர்ந்தே...
Loading posts...

All posts loaded

No more posts