- Friday
- November 1st, 2024
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் வர்ணப்பூச்சுக்களால் வீதிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களுடைய விருப்பிலக்கங்களை பொறிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். மாவட்டத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை...
கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயிருந்த தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்டுமாறு கோரி, தாயார் ஒருவர் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின்போது, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த 17 வருடம் 2 மாதம் வயதுடைய பெண் கழுத்தில் தாலியுடனும் 6 மாதக் கர்ப்பத்துடனும் தனது...
வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு கடந்த காலங்களில் அபராதம் விதிக்கப்படாமைக்கான காரணம், 298/2005 என்ற வழக்கின் படி, அதிகமான பாதைகளில் வேக எல்லைகள் சரியான முறையில்...
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். 'போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும்...
சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக 10 ஆவது தடவையாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, வியாழக்கிழமை (06) வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்....
நாளை(8) நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை பொறியியல் தொழில்நுட்ப பகுதி 2 க்கான வினாத்தான் கம்பகா மாவட்டத்தில் இன்று மாலை வெளியாகியுள்ளது .அதை வெளியிட்டவர் சம்பந்தமான விபரங்கள் இல்லை ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு விட்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பகா மாவட்டத்தில் உள்ள ரத்னவலி பாலிக வித்தியாலய மாணவர்களிடமே இந்த வினாத்தாள்...
மன்னார் – மாந்தை மேற்கு – இலுப்பக்கடவை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட – கோவில்குளம் கிரமப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றதும் , மேற்படி இருவரும் கள்ளத்தொடர்பை பேணி வந்துள்ளதுடன் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்...
பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் - வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி...
ஆவணி மாதத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய தேசிய அளவிலான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் யாழ். மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவேண்டிய தேவையுள்ளது. இதனால் இந்த மாதத்தில் பிணை வழங்க முடியாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவர்...
சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் சகோதரனுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில்...
யாழ். பொலிஸ் நிலைய இரு பொலிஸார் கடமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சுஜிவன் மற்றும் சாயன் தென்னக்கோன் ஆகியோரே இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். யாழ். அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கண்காணிப்பதற்காக வெள்ளிக்கிழமை (31)...
புத்தூர்- நவக்கிரி நிலாவரைச் சந்தியில் உள்ள தேநீர் கடையை உடைத்து உள்ளே நுழைந்த பொலிஸார் அங்கிருந்த இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த இழுபறியில் பெண்ணொருவரின் மேலாடை கிழிந்து மார்பகங்கள் வெளியே தெரிந்தது அதைப் பற்றிக் கவலைப்படாது பொலிசார் அட்டகாசம் செய்ததாக பிரதேசவாசிகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு சம்பவம்...
கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய பூசகர் ஒருவரை வியாழக்கிழமை (23) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு தொகை சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி, பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்தார். கொடிகாமம் விபசார விடுதியில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட அவ்விடுதியின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...
கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் இருந்து வரும் இரண்டு சந்தேக நபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து கட்டளை பிறப்பித்துள்ளார். சின்னத்தம்பி திருச்செல்வம் என்ற நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்...
பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா...
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக வழக்கை தொடர்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரும்...
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறில், கத்திக் குத்துக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தந்தையான ராசலிங்கம் சாந்தரூபன் ( 28 வயது) என்பவர்...
நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறை, மலசலகூட அறைக்கதவு ஆகியவற்றை உடைத்த 28 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதிநந்த சேகரம், வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார். நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலையத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை (14), மதுபோதையில் வந்த குறித்த நபர்...
Loading posts...
All posts loaded
No more posts