- Friday
- November 1st, 2024
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரின், இரத்த மாதிரிகளை தனியார் இராசாயண பகுப்பாய்வு நிறுவனதிற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 14ம் திகதி புங்குடுதீவு...
இளவாளை பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக இளவாளை பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்கள் வேன் ஒன்றில் குறித்த கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஞ்சுள டி சில்வா குறிப்பிட்டார்....
கொலைக்குற்ற சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்யச் சென்றபோது குறித்த சந்தேகநபர் பொலிஸாரை வாளால் வெட்ட முயன்றமையால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (30) மாலை அல்வாய் பகுதியில் இடம்பெற்றது. காலில் படுகாயமடைந்த சந்தேகநபரான எம்.சதீஸ்குமார் (வயது 28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். அல்வாய்...
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் இரண்டு பவுண் நிறையுடைய தங்கச்சங்கி ஒன்றும் மற்றும் ஏழரை பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்றும் திருட்டுப்போயுள்ளதாக...
மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம்...
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் 28 பேரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....
முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட அரச போக்குவரத்து பஸ் ஒன்று ´ஹோஹம்ப´ என்னும் இடத்தில் வைத்து மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று அதிகாலை, சேவையில் ஈடுபடும் நோக்கில் கொக்கிளாய் என்னும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனை இரு நபர்கள் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் கடத்திச் சென்றிருந்தனர்....
6.396 மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன, வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெற்றோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காங்கேசன்துறை பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். இந்தியா, இராமேஸ்வரத்தினைச் சேர்ந்த காளி...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனங்களை பலர் நிறுத்திச் செல்வதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைக்கு வருகை தரும் அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் நோயாளிகள் ஏற்றி வரும் வாகனங்கள் உட்செல்ல முடியாதவாறு வாயிலுக்கு நேரே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில வாகன ஓட்டுனர்கள்...
செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களால் சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த அதிபரை பாடசாலைச் சமூகம் இடைநிறுத்தியிருந்ததோடு, நன்னடத்தைப்...
அபுதாபி சென்று அதனூடாக இத்தாலி செல்ல முயன்ற யுவதியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த யுவதியை இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இரண்டரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஒரு பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் யாழப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலயத்திற்கு வருகை தந்த பெண்ணிடம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நகைகளை கொள்ளையிட்டுள்ளார். சந்தேகநபர் ஆலய வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்....
தேர்தல் காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஒருவர் உட்பட அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார்கள் என இருவேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி ரீ.கனகராஜ் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைக்கு அனுப்பியமை தொடர்பில் மேற்படி பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கபெற்றிருப்பதாக கனகராஜ் கூறினார். அதேபோல்,...
யாழ் பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி லோறன்ஸ் அனா எப்சிபா கடந்த மாதம் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்ததற்கு மருத்துவ பீட விரிவுரையாளர் ஞானகணேஸ் றஜித் (ஜெனா) என்பவர் மீது மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று முதல் தடவையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மாணவியின்...
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (13) தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும்...
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், புதன்கிழமை (12) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 60 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 4ஆவது சந்தேகநபரிடமிருந்து...
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல வர்த்தகருமான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்தது. மாணவியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவை...
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி, நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27பேர் தொடர்ந்து விளக்கமறியலில்...
சாவகச்சேரி, கச்சாய் பகுதியில் போலி வாக்குச் சீட்டுக்களுடன் வாகனத்தில் சென்ற 3 சந்தேகநபர்களை நேற்று திங்கட்கிழமை (10) இரவு கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனத்திலிருந்தே இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேர்தல் சுவரொட்டிகள் சிலவற்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். வாகனத்தில் ஒலிபெருக்கியை...
Loading posts...
All posts loaded
No more posts