- Friday
- November 1st, 2024
சுன்னாகம் பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு மேற்க் கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது பலவேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஏழாலை பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட நான்கு பேரையும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம்...
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல்...
நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு கலாசாரத்துக்கு ஒத்துவராத ஆடைகளுடன் வந்த ஆண்கள் ஐவருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார். நீதிமன்ற வழக்குக்கு வந்திருந்த நபர்களின் ஆடை தொடர்பில் வியாக்கியானம் தெரிவித்த நீதவான், குறித்த ஐவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு...
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார். தற்போது...
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற...
ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து...
வன்கொடுமையின் பின் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சிறுமி சேயாவை தானே கொலை செய்தார் என்று சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கொண்டயாவின் சகோதரரான ஜயலத். சேயா கொலை வழக்கு நேற்று மினுவாங்கொட நீதிமன்றில் பிரதம நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஜயலத் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார் என்று சி.ஐ.டியினர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினர். சேயா கொலைக்குப் பின்னர் கொண்டயா...
யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த 14 வயது மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான். மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது....
கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வேலாயுதம் வரதராஜ் என்பவருக்கு 290 வருடங்களும் சந்திரா ரகுபதி என்பவருக்கு 300 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து...
யாழ். கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது.இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இக்குழுவில் 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியில் இருந்து நீலப்படங்கள்,பாடசாலை மாணவிகளின் புகைப்படங்கள்...
போலியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞரொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி கடவுச்சீட்டில் கனடா நாட்டுக்குரிய போலி விசாவும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனையினை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாணவியின் மூக்குக் கண்ணாடியினை பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரிடம் கையளிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று...
அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ். நகரப் பகுதியில் வைத்து, ஆசிரியரான சண்முகவேல் மாதவமணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும் சிலரால் தாக்கப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த ஆசிரியர் யாழ்....
நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார். வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார்....
யாழ். பஸ் நிலைய பகுதியில் மது போதையில் நின்ற ரவுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியரில் கணவன் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு10.30 மணியளவில் யாழ். பஸ் நிலையத்துக்குப் பின்பாக உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தியுள்ளனர்....
யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக, யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றனர். சுன்னாகத்தில் கடையொன்றுக்குள் புகுந்த...
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர். அவர் திருமணமாகி 7...
கைதடிப் பகுதியில் இரண்டு பெண்களை தாக்கி, அவர்களின் ஆடைகளைக் கிழித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (23) உத்தரவிட்டார். கைதடி பகுதியிலுள்ள சனசமூக நிலையமொன்றில், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில்,...
சுன்னாகம் நகரப்பகுதியில், பாடசாலை மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், நான்காவது சந்தேகநபரை எச்சரித்த நீதவான், அவரை...
Loading posts...
All posts loaded
No more posts