- Friday
- November 1st, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுவந்த இசைத்துறையின் தலைவர் விசாரணைக்காக தற்காலிக பணி இடைநிறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். குறித்த விரிவுரையாளர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக பரீட்சை முடிவுகளில் கைவைப்பதான தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து மாணவிகள் துணிந்து சாட்சியமளிக்க தயங்கிய நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி...
வல்வெட்டித்துறைப் பகுதியில் குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் தாயாருடன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற தாபரிப்பு, தொடர்பான விசாரணைக்கு தாயாருடன் வந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை, வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது. குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள்...
கோப்பாய் பொலிஸாரின் செயற்பாட்டை விசாரணை செய்யக்கோரி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று முன்தினம் யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் நிகழும் சம்பவங்களின் வழக்கு விசாரணை அறிக்கைகள் திருப்தி இல்லை எனவும் அத்துடன்...
மனைவியைக் கொலையற்ற மரணம் செய்த கணவனுக்கு 16 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி கைதடி கிழக்கில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை...
இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்...
யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு...
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பினர் சென்றபோது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது. இந்த...
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது...
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது. பின்னர் 73 வயதான...
18 வயது வந்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 3 வருடங்களாக தன்னுடன் பழகி தன்னை ஏமாற்றிய இளைஞன் வேறொரு யுவதியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக, பாதிக்கப்பட்ட யுவதி, திங்கட்கிழமை (12) இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கீரிமலை சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியும் சில்லாலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும்...
தொழில் போட்டி காரணமாக இளம் குடும்பஸ்தர் மீது மூவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையின் விபத்து அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாவடி ஐந்து வேம்படி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருந்தவச் செல்வன் அருண்றொஜீவ் (வயது-33) என்பவரே மேற்படி தாக்குதலில் படுகாயமடைந்து...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புகளில் கல்விக்கற்கும் மாணவிகளை பாடசாலைப் பணியாளர் ஒருவர், அலைபேசியில் மறைமுகமாக புகைப்படங்கள் எடுத்து வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் உயர்தரத்தில் கல்விக்கற்று...
அல்வாய் திக்கம் பகுதியில் வாளுடன் ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் அல்வாய் முத்துமாரியம்மன் கோயில் பகுதியினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறினர். அல்வாய் திடல் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து, ஒரு குழுவினர் வாளுடன் திக்கம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்பகுதியில்...
சங்கானைப் பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை, ஞாயிற்றுக்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கு இறைச்சியாக்கப்பட்ட 400 கிலோகிராம் மாட்டு இறைச்சியை கைப்பற்றிய பொலிஸார், இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஏழாலை, சுன்னாகம், மாசியப்பிட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதுடன்...
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது: வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு திணக்களப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக தி சில்வா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட...
வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை...
விஸ்வமடுவில் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று, மன்னாரில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கை மையமாகக் கொண்டு இயங்கும் 8 பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பான “வான்” இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டை செய்துள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts