Ad Widget

என் மகள் குறித்து எவரும் சிந்திப்பது இல்லை – சேயாவின் தந்தை குற்றச்சாட்டு

துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட தனது மகள் குறித்து எவருக்கும் அக்கறை கிடையாது என சேயா சதெவ்மியின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மகளின் படுகொலை தொடர்பில் கைது செய்து விடுவிக்கப்பட்ட கொண்டயா...

குடும்ப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு விளக்கமறியல்

நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி, வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டாhர். கடந்த 22ஆம் திகதி...
Ad Widget

இலங்கை பொலிஸாரின் சித்திரவதைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இது குறித்து அந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை...

விமல் வீரவன்ச கைது; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்....

கடற்படை சிப்பாய் மரணத்தில் சந்தேகம் சக சிப்பாய் கைது

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சக சிப்பாய் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த பசற பகுதியைச் சேர்ந்த எஸ். பி.ஏ. லக்மல் ஜெயதிலக நேற்று முன்தினம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் என்றும் அவரின் சடலம் யாழ்....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக்...

காங்கேசன்துறை கடற்படை சிப்பாய் பாலியல் குற்றச்சாட்டில் கைது

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணிப்புரியும் கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் 33 வயதான இந்த கடற்படை சிப்பாய் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது....

யாழில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா: இருவர் கைது

60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்தியாவின் - இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை...

யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல்

குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி, வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனால் குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது...

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேரையும் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் அனுமதித்தார். 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்வதற்கு ஒவ்வொருவரும் நீதவான் அனுமதியளித்தார். கடந்த வழக்குத் தவணையில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8...

ரவிராஜ் கொலை வழக்கு: 5 கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர் என சந்தேகநபர்கள் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீலால் தன்தெனிய தெரிவித்தார். ரவிராஜ் கொலை சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட...

பாலியல் இலஞ்சம் கோரியமைக்கு நம்பத்தகு ஆதாரங்கள் இல்லையாம்!

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது

நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக்...

சமூக வலை­த்த­ளங்­களில் தனிநபரை, இழி­வு­ப­டுத்தும் பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­ம்

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­றங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். நீதி அமைச்சில் நேற்று (19) இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு பிணை இல்லை!

தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி - பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக கட்டப்பட்டிருந்த கூட்டில் இருந்து வயோதிபர் ஒருவர் பலகோல்ல பொலிஸாரால் அண்மையில் மீட்கப்பட்டார். பின்னர் குறித்த வயோதிபர் அந்த வீட்டு உரிமையாளரின்...

கொண்டயா விடுதலை

கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சேயா கொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், கொலையுடன் தொடர்புடைய கொண்டயாவின் அண்ணனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

இரும்பு களவாட முயன்ற இராணுவத்தினர் 8 பேருக்கும் பிணை

கைதடி மற்றும் நாவற்குழி பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையின் பெரிய அளவிலான வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்களையும், இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாட முற்பட்ட 8 இராணுவத்தினரையும் சாவகச்சேரி நீதவான் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்த்pல் ஆஜராக...

இரும்பு திருடிய இராணுவத்தினர் பொலிஸாரினால் கைது : பொலிஸ் நிலையம் இராணுவத்தினரால் முற்றுகை!!!

யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் விளம்பர பதாகையை விளம்பர நிறுவனமொன்று நாவற்குழிப் பிரதேசத்தில் அமைத்து இருந்தது. விளம்பர பதாகைகளை அமைக்கும் போது அவை காற்றால் விழாமல் இருக்க பாரிய இரும்பு கேடர்கள் கொண்டே அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த விளம்பர நிறுவனம் அமைத்திருந்த ஏனைய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. அந்த இரும்புகளை...

வீதி திருத்துவதற்கான கல்லை விற்ற ஒப்பந்தகாரர்

நயினாதீவு, விநாயகர் வீதியின் புனரமைக்காக வைக்கப்பட்டிருந்த கற்களை, அந்த வீதியை புனரமைப்பதற்காக ஒப்பந்த செய்திருந்த நபர், வீடு கட்டும் ஒருவருக்கு, விற்பனை செய்துள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குறித்த ஒப்பந்தகார், கிராமஅலுவலர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

4 வயது பிள்ளை சாட்சி : இருவருக்கு மரண தண்டனை

பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மாத்தளை, ரத்தொட்டை பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால்...
Loading posts...

All posts loaded

No more posts