- Saturday
- November 2nd, 2024
யாழ்ப்பாண பல்கலைகழக 1ஆம் வருட மாணவனை அடித்து துன்புறுத்திய இரு மாணவர்களை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார். துன்புறுத்தலுக்கு உள்ளான 21 வயதுடைய மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த மாணவனை 3 ஆம் வருட மாணவர்கள்,...
இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின்...
வடமாகாண உதவி கலால் அதிகாரியான கிரிஸ்ட் ஜோசப், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10,000 பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 60 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தாவுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன், சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனே இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக்...
தனது ஆறு வயது பிள்ளையை ரயிலில் தள்ளி கொல்ல முற்பட்ட பெண்ணொருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கிய பயணித்த ரயிலிலேயே அவர் தனது பிள்ளையை தள்ளிவிட்டுள்ளார். எனினும் கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் தப்பிச்...
தனியாக வசித்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. பாலசிங்கம் சிறிதேவி (வயது 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் - உடுவில் - லவ் லேனில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறியவருவதாவது: பெண்ணின் வீட்டில் அவர் மட்டுமே வசித்து வந்த...
வயதான பெற்றோருடன் வசித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள் அவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் யாழ்ப்பாணம் - மானிப்பாய் - எழுமுளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். நகரில் இயங்கும் பல உணவகங்களிலும் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவினர் கண்டும் காணாதபோக்கில் செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ். புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுக்குள் தீக்குச்சி காணப்பட்டதுடன், இறைச்சியில் அகற்றப்படாத இறக்கையும் காணப்பட்டதாக...
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடி தாக்குதல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்ட ஒழுங்கு மற்றும் சிறசை்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்துள்ள பிரதமர், விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் இனங்ககோனுக்கு பணித்துள்ளார்....
தனக்குக் கற்பித்த ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று, அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்ததாகக் கூறப்படும், அவரது மாணவனைக் குற்றவாளியாக இனங்கண்ட மாத்தறை மேல் நீதிமன்றம், அவரதுக்கு நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மாத்தறையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காகச் சென்றிருந்தபோதே, அவர், ஆசிரியையைப் படுகொலை செய்திருந்தார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் மாத்தறை...
மாற்று வலுவுடைய மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு துணையாக இருந்தார் எனக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியையை விளக்கமறியலில் வைக்க யாழ். சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி நவீல்ட் மாற்று வலுவுடையோருக்கான பாடசாலையில் கல்வி கற்ற 5 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் அதன் அதிபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இருந்தார். துஷ்பிரயோகத்துக்கு...
யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், HNDE மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 பெண்களுடம் 2 பிக்குமாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற போதிலும், இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணைக்குழுவின்...
பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தாபரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு...
பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை - உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுத்துறை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் பளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கடந்த 26ம் திகதி...
கொக்குவில் பகுதியில் கஞ்சா மற்றும் பாவுல் ஆகிய போதைப்பொருட்களை மாணவன் ஒருவருக்கு விற்பனை செய்தவரையும் அவற்றை வாங்கி வைத்திருந்த மாணவனையும் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் யு.கே. தெரிவித்தார். நேற்றைய தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இவர்கள் இருவரையும் தாம் கைது செய்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,...
சுன்னாகம் நகரப் பகுதியில் மாணவர்கள் இருவரை, பியர் போத்தலால் வெட்டிய சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 34 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களும்,...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வின் பின்னரான படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
Loading posts...
All posts loaded
No more posts