- Saturday
- November 2nd, 2024
தென்னிலங்கையின் காலி பகுதியில் தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த...
பில்லி, சூனியம் வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று வந்தவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார். பில்லி, சூனியம் மீது நம்பிக்கையுடையவர்கள் குறித்த நபரிடம் சென்றால் அவர்களிடமிருந்து சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்து ஒன்றை வழங்குவதாகவும் அந்த...
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில்...
புங்குடுதீவு பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த சிறுமியை தொடர்ச்சியாக இரு தடவைகள் அவரது தந்தை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிலிருந்து தெரிய வந்துள்ளது. சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பாலேந்திரன் பிரசாத் என்ற இளைஞரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த (26) யாழ்....
யாழ். பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். யாழ்.நகரப் பகுதியில் இயங்கி வந்த உணவு விடுதி ஒன்றுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி 3 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று 3 கிலோ நிறையுடைய சோஸ்...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு பஸ்ஸில் ஏறியுள்ளனர்....
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி...
நாங்கள் குற்றம் செய்யவில்லை. எங்களை விடுதலை செய்யுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றுஞ திங்கட்கிழமை (23) மன்றாட்டமாகக் கேட்டக்கொண்டனர். கொலை செய்தீர்கள் என்பதற்கு அப்பால், கொலையுடன் தொடர்புபட்டுள்ளீர்களா என்ற ரீதியிலும் விசாரணைகள் இடம்பெறும் என நீதவான் செல்வநாயகம் லெனிக்குமார் இதன்போது கூறினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சுந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை...
பருத்தித்துறை, மணற்காடு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரச தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் தோண்ட முற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வரையும் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதி...
தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருககு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத்...
பாக்கு நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இராமேசுவரத்தில் இருந்து 600 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பாக் நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். மேலும் 14...
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், நல்லூர்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் தடுப்புக் காவல், மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் டிசம்பர் 01ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு கைதிகள், புதன்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய கைதிகளை நாவற்குழிப் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று வியாழக்கிழமை (12) அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தும் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். இந்தக் தகவலை சாவகச்சேரி...
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, நாளை வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
நம்பிக்கை மோசடி செய்து நகைகளை விற்ற கூவில் கீரிமலை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை, நேற்று புதன்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். திருமண வீடு, ஏனைய வைபவங்களுக்கு அணிந்து விட்டுத் தருவதாகக் கூறி, அயல் வீடுகள் இரண்டில் கடந்த 7ஆம் திகதி நகைகளை குறித்த பெண் வாங்கியுள்ளார். வாங்கிய...
Loading posts...
All posts loaded
No more posts