கிரிக்கட் வீரர் கொலை வழக்கு: 3 எதிரிகளுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை! ஏழாம் எதிரிக்கு சர்வதேச பிடிவிறாந்து!!

யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு...

சிறுவனை வாளால் வெட்டிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற...
Ad Widget

சந்தேக நபர் தற்கொலை முயற்சி : தீர்ப்பு பிற்போடப்பட்டது

கரணவாய், மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வயோதிபர் தற்கொலைக்கு செய்து கொள்ள முயற்சி செய்தமையினால், அந்த வழக்கு தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (14) வழங்கப்படவிருந்த தீர்ப்பு, எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். வயோதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவரது சட்டத்தரணியூடாக...

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை

சிறுமி சேயா சௌதமி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆஸி.யில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பின் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கைதுசெய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்கராயனில் பொலிஸ் சுற்றிவளைப்பு : இருவர் கைது

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வன்னேரிக்குளம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் கிளிநொச்சி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (14) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி இரு கிராமங்களிலும் மணல் கடத்தல் இடம்பெறுகின்றது என பொலிஸாருக்கு நீண்டகாலமாக...

சிறுமி சேயா படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் மீண்டும் கைது

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் நேற்று மினுவாங்கொடை நீதவான்...

ஹரிஸ்ணவி கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில்,...

முதியவரை மோதிய பல்கலைக்கழக மாணவர்கள் கைது

யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) காலை, வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றச்சாட்டில், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குருசுவீதி, சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த பீற்றர் (வயது 53) என்ற வயோதிபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா...

தமிழக மீனவர்கள் நால்வர் காரைநகர் கடற்பரப்பில் கைது

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பின் வடமேற்குப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தமிழகம் - புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய ரோலர் படகொன்றையும் கடற்படையினர்...

வல்வெட்டித்துறை மாணவி கடத்தல் விவகாரம் – குடும்பஸ்தருக்கு 15 ஆண்டுகள் சிறை

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீட்டை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது...

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கைது!

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று நாடு கடத்தப்பட்ட நபரொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான குறித்த நபர், வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்.தனியார் பஸ் நிலையம் அருகில் 14 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரு இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் காலை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 8.கிலோவும் 400கிராமும் பெறுமதியான கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும்...

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தி வெட்டு

சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்கான சம்பவமொன்று, திங்கட்கிழமை (07) திக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரீ.வ.சிவன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கத்திக்குத்துக்கிலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை ஒன்றுடன் தொடர்புபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்யச் சென்ற போது, சந்தேகநபருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் முரண்பாடு...

நள்ளிரவு அதிபர் வீட்டின் மீது கல்வீச்சு! காலையே காவல்துறை வந்தது

நேற்று(7) மகாசிவராத்திரி தினமன்று நள்ளிரவு மதுபோதையில் வந்த இனந்தெரியாதவர்களால் யாழ் இந்துக்கல்லுாரி அதிபரின் உத்தியோக பூர்வ இல்லத்தின் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அதிபர் இல்லத்தில் இல்லை என்று அறியவருகின்றது. கல்லுாரி வீதியில் கல்லுாரிக்கு முன்பாக  இருந்த அதிபர் இல்லத்தின் மீதே இந்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுப்போத்தல் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் போது கல்லுாரி பாதுகாப்பு உத்தியோகத்தர் வாள்...

வித்தியாவின் படுகொலைக்கு ஒருதலைக் காதல் காரணம்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதன்போது, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளை...

வித்தியா கொலையின் சூத்திரதாரிகளை இனங்காட்டியது சி.ஐ.டி.! [காணொளி]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமார் உட்பட ஆறு பேரினை கொலைக்குற்றவாளிகள் என குறித்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் புலனாய்வு துறை அறிவித்துள்ளது. இன்று காலை மேற்படி வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ரியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே புலனாய்வு துறை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. குறித்த கொலைக்கு சுவிஸ்குமார் திட்டமிட்டார் எனவும், இரண்டாம்...

காதலித்து ஏமாற்றிய இளைஞருக்கு 7 வருட கடூழிய சிறை! பாதிக்கப்பட்ட யுவதிக்கு ரூ.100,000 நட்டஈடு!!

திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன். கடந்த 2015 ஆம் ஆண்டு தென்மராட்சி வரணி, இடைக்குறிச்சியை சேர்ந்த...

கோப்பாய் கத்திக்குத்துக் கொலை வழக்கில் எதிரிக்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறை!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை சகோதரர்களும் உறவினருமாக வாள்கள் கத்தி சகிதம் சென்று குத்திக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளார். தண்டப் பணம் செலுத்தத் தவறினால் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்...

குப்பை கொட்டினால் 1000 ரூபாய் அபராதம்

யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. தற்போது அங்கு விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது....
Loading posts...

All posts loaded

No more posts