- Wednesday
- February 5th, 2025
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட விசேட குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450 இற்கும் அதிகமான கைதிகள் தொடர்பில்...
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள், நிபந்தனைகளை மீறி கரையில் இருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 39 பேரை சனிக்கிழமை (23) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (24) எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்' என கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள யாழ். மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்....
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின்...
இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக...
யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ்...
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் கைது செய்தனர். புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண்,...
முச்சக்கர வண்டியொன்றில் கூடிய சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்துகொண்டு சென்ற சாரதிக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை, தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில்...
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரை திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் அபகரித்த பொறியியலாளர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய குறித்த...
காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று படகுகளில் பயணித்து கொண்டிருந்த போதே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சிறுபடகுகளும், 40 அடி நிளமான பெரிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை மாவட்ட பிரதி நீரியல்வளத்துறை பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவிடம் கடற்படையினர்...
ஈபிடிபி உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா என்பது குறித்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்...
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி,...
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது....
யாழ். நீதிவான் நீதிமன்றில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் 500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரை இன்று புதன்கிழமை (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் தண்டப்பணம் செலுத்திவிட்டு...
பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை குறித்து, 34வயதுடைய திருமணமான நபர் ஒருவர் 04.04.2016 அன்று இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்று வந்த 9வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டவராவார். அம்மாணவி, ஆபத்தான நிலையில்...
அச்சுவேலி பகுதியில் உள்ள 3 வீடுகளில் 110 பவுண் நகைகள், சனிக்கிழமை (02) இரவு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான சந்தேகநபரான வான் சாரதி அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டதாகவும், மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது...
கொழும்புத்துறையிலுள்ள வீடொன்றுக்குள் கடந்த 2ஆம் திகதி புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியதுடன் பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருநகர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும்...
அச்சுவேலி, அதனை அண்மித்த நவக்கிரியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளையர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் எனக் கருதப்படும் வாகனச் சாரதி ஒருவரை கோப்பாய்...
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். கடந்த மார்ச் 04ம் திகதி...
சாவகச்சேரி மறவன்புலவில் தற்கொலை அங்கி,கிளைமோர் மீட்பு சந்தேக நபர் கைது-அதே இடத்தில் 16 சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தமிழ் இராணுச் சிப்பாய் ஒருவரும் ஒரே நாளில் கைதாகியுள்ளமை பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மீட்க்கப்பட்ட வெடிபெருட்க்கள் யாவும் சிங்கள மொழிப் பத்திரிகையினால் சுற்றப்பட நிலையில் காணப்படுவதனால் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கைதாகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாம்.
Loading posts...
All posts loaded
No more posts