Ad Widget

கல்முனையில் கடத்தப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தில் மீட்பு

அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருதுவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாயிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வீட்டிலிருந்த நிலையில் குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பெண் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால்...

வைத்தியசாலை பெண் ஊழியருடன் சேஷ்டை விட்ட மூவர் பொலிஸாரால் கைது

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழிருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு...
Ad Widget

ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கான அபராதம் உயர்வு

ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று அரசாங்க...

புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்தார். குறித்த வழக்கின்...

கணவனை வெட்டிய மனைவிக்குப் பிணை

குடும்பத்தகராற்றின் போது கணவனை காட்டுக்கத்தியால் வெட்டி படுகாயமடையச் செய்த மனைவியை, தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். உருத்திரபுரம், எள்ளுக்காடுப் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கு இடையில் திங்கட்கிழமை (09) தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது...

யாழில் வாள்கள், கத்­திகள் உற்­பத்திசெய்ய தடை!!

சட்டத்துக்கு முர­ணான வகையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை கம்­மா­லைகள் உற்­பத்தி செய்­வ­தற்குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்ள யாழ்.மேல் நீதி­மன்றம், அவற்றை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் உட­ன­டி­யாகக் கைய­ளிக்க வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது. யாழ்.குடா­நாட்டில் வாள்வெட்டுச் சம்­பவங்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. அத்­துடன் ஆபத்­தான கத்­தி­களைக் காட்டி அச்­சு­றுத்தி கொள்­ளைகள் இடம்­பெ­று­வ­தை­ய­டுத்தே இந்த உத்­த­ரவை யாழ். மேல்...

பொலிசின் அதிரடியில் யாழ். குடாவை அச்சுறுத்திவந்த ரவுடிக்கும்பல் சிக்கியது

யாழ்.குடாவை வாள் வெட்டுச்சம்பவங்களால் அச்சுறுத்தி வந்த பிரதான ஒருங்கிணைந்த குற்றக் குழுவாக கருதப்படும் 'ரொக் டீம்' எனும் பெயர்கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் பதிவான பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவே இவர்களை...

சுற்றுலாப் பேரூந்து மீது கல்வீச்சு: ஐந்து இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகளின் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் குறித்த...

நாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது

படகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஜாயல பகுதியைச் சேர்ந்த...

வாள்வெட்டுக்கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது

உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் தடிகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் கூறினர். இரவு நேர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சட்டவிரோதக் கூட்டம் கூடி நின்ற இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை...

ஏ.ரி.எம். இயந்திரங்களில் தகவல்கள் திருடிய சீனா பிரஜைகள் கைது

வர்த்தக வங்கிகளிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை வடிவமைத்து,பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை திருடிய சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பணம் மீளப்பெறும் அட்டையை உரிமையாளர்கள், இயந்திரத்தில் செலுத்தும்போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு கணக்கு உரிமையாளர்கள் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 26ஆம்...

நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு: ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறை

மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், மல்லாகம் நீதிமன்றத்தில் வைத்து வியாழக்கிழமை (28) வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 2 இலட்சத்து 50...

பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 15 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ் சுகாதார திணைக்கள பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து...

யாழில் 27 இளைஞர்கள் கைது!

யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என...

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விட்டவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டதாகக் கூறப்படும் ஒருவர், நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தின் ஊடாக அந்நபர், இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போதே, இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு கொக்குகளை வேட்டையாடியவர் இறைச்சியுடன் கைது

மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப்...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது! குண்டுகளும் மீட்பு

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெ­று­கின்­ற­ வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் தொடர்­பாக ஏழு சந்­தே­க­ ந­பர்­க­ளை ­கை­து­ செய்­துள்­ள­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்­து வாள் மற்றும் உள்ளூர் குண்­டுகள் சிலவும் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க­ யாழ்ப்­பா­ண­ பொ­லிஸார் தெரி­வித்­தனர். அரி­யாலைப் பகு­தியில் வைத்து இவர்­களை கைது­ செய்­துள்­ள­தா­க­ பொ­லிஸார் தெரி­வித்­தனர். அண்மைக் கால­மா­க யாழ் குடா­நாட்டில் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் ஆயு­த­மு­னையில் வீட்­டா­ரை ­அச்­சு­றுத்­தி ­பணம் நகை­ என்­ப­வற்­றை...

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பகுதியில் தனது வீட்டிலிருந்த சமயம் ராம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் வைத்து கலையரசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்றும் திருகோணமலையில் பாதுகாப்புப் படைத்தரப்பினர் மீதும் காவல்துறையினர் மீதும்...

அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை வீட்டிற்கு வெளியில் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் வெட்டப்பட்டு கையிலும் முதுகிலும் துடையிலும் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார். இதுகுறித்த தெரியவருவதாவது இன்று காலை சில இனந்தெரியாத நபர்கள் இளம் குடும்பஸ்தரின் வீட்டிற்கு வந்து வீட்டாரை விசாரித்துவிட்டு அவரை வெளியில்...

மரணதண்டனையிலிருந்து தப்பினர் 83 கைதிகள்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட விசேட குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450 இற்கும் அதிகமான கைதிகள் தொடர்பில்...
Loading posts...

All posts loaded

No more posts