- Tuesday
- November 5th, 2024
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீளப் பெறச்...
உடுவில் மேற்குப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை, நேற்றுத் திங்கட்கிழமை (25) கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் மேற்குப் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர், அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகராற்றில் ஈடுபட்டு இளைஞன்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் ஒத்தி வைத்தார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26) மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை...
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் தொடர்புபட்டிருந்த நிலையில், மாணவி கொலை...
நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்' என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். 'உனக்கு தனி நாடு தேவையா?' எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக்...
பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார். இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார். தெல்லிப்பழை மணல்குளம்...
உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர், சனிக்கிழமை (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில்...
போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை...
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில்...
சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உடனடியாக நிறுத்தப்பட...
யாழ்பாணத்தில் வீடொன்றில் புகுந்து தங்கக் கட்டிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 20 வயதான இளைஞன் மற்றும் யுவதி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இருவரும் வவுனியா, சிதம்பரப்புரம் பகுதியை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்....
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின்...
வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு வரும் 25 ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்....
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள்ளிருந்து 9 இலட்சம் பெறுமதியான உந்துருளியொன்று திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது, கடந்த புதன்கிழமை நபரொருவர் நீதிமன்றத்துக்கு உந்துருளியில் சென்று அதனை நீதிமன்ற வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, திரும்பி வரும்போது அவரது உந்துருளி காணாமல் போயுள்ளது. இதனையடுத்து குறித்த நபரால் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணையை...
யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ்...
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை...
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனுடன் தவறாக நடந்ததாகவும், தாக்கியதாகவுமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பபில் மேலும் தெரியவருவதாவது தரம் பத்தில் கல்வி பயிலும்...
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரைச் சேர்ந்த நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம்...
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார். வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில்...
யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts