- Wednesday
- January 22nd, 2025
இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவரை வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அவரை முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. மாணவர் அனுமதிக்கு கையூட்டுப்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்கு 50...
குளோபல் லைவ் ஸடரைல் லங்கா நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். யாழ்.மாநகர சபை...
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை...
யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இந்த...
இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகள், மடி கணினி, 4 தொலைபேசிகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களையும் சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவிலில்...
இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது...
2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி உயிர் துறப்புக்கு முயற்சித்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த...
கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கோண்டாவில் உடும்பிராய் மேற்கு வீட்டிற்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார்...
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி...
யாழ்ப்பாணம் நகரில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த அலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட அலைபேசி மற்றும் கைப்பை என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. கொள்ளையிட்ட நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்....
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த 6 பேரும் நேற்றைய தினம் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்....
யாழ்ப்பாணம் வருவதற்க்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் வருவதற்க்கா திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். இந்த...
திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்றுள்ளனர். மானிப்பாய் கொத்துக்கலட்டி பகுதியில்...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். “சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நிஜிலன் ஆகிய நால்வரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ரி. நிர்மலராஜ், ரூபன் ஜேசுதாசன்...
வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி...
போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு சலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்கு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3...
மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே பொலிஸாரால் இன்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி...
மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது தப்பிச்சென்ற வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த மூவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் இணுவில் வீதியில் கடந்த சனிக்கிழமை இரவு...
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த விசாரணை நேற்று முன்தினம் (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டு எனவும் பொலிஸாரால்...
Loading posts...
All posts loaded
No more posts