- Tuesday
- November 5th, 2024
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். கிளிநொச்சியில் – ஏ9 வீதி 155 ஆவது கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பின்புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது சிறுவன் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், 26 வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...
இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு 26 வயதாகும். இதேவேளை, நேற்றையதினம் கடுகன்னாவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இரு சந்தேகநபர்களையும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.
க்கோயா பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, கையடக்க தொலைபேசி ஊடாக பார்த்து கொண்டிருந்த 5 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த சிறுமியின் பெற்றோர், ஹெட்டன் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காணொளியை பதிவு செய்து வைத்திருந்த கெமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிர தான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் இதனை கூறியுள்ளார். யாழ்....
சங்குவேலியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
மதுபோதையில் வாகனம் செலுத்திய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவருக்கு 9,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், 50 மணித்தியாலம் சமூதாய சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பளித்தார். வல்வெட்டித்துறை போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, அபராதத்துடன் கூடிய...
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம், புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக...
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...
நல்லூர் வீதியில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன், இன்று செவ்வாய்க்கிழமை (23) அனுமதித்துள்ளார். நல்லூர் ஆலய சூழலில் காலணியுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸார், திங்கட்கிழமை (22) இரவு...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை...
நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்துத் தெரியவருவதாவது, நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா, கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துக்கு வருகை தருவோரிடம் கோரிக்கை...
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான பெண் நேற்றய...
சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்நியாவிலிருந்து படகு மூலமாக கேரள கஞ்சாவினை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களை பருத்தித்துறை மணல்காடு பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 101 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பருத்தித்துறை மற்றும்...
சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கனடாவில் இருந்து வந்தவர் பாதுகாப்பு கோரியதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன் பிணையில் சென்றிருந்த எதிரியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்க்கண்டு...
இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால்...
குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 17 இலங்கையர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (15) கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading posts...
All posts loaded
No more posts