- Tuesday
- November 5th, 2024
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, சுவரொன்றின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதாக கூறி, கடந்த செப்டம்பர் 22ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் விபத்தினை...
ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட பெண் முல்லைத்தீவைச் சேர்ந்த...
சங்கத்தானைப் பகுதியிலுள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரையும், எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அச்சுவேலி நன்னடத்தைப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார். கடந்த 9ஆம் திகதி இரவு, குறித்த கடையின் கூரைப் பிரித்து இரண்டு...
இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 இராணுவ வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதி இராணுவ முகாமில் கடமையாற்றிய குறித்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு...
முதல் திருமணத்தை மறைத்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற யுவதியை திருமணம் செய்து, 45 இலட்சம் சீதனமும் வாங்கிய ஆசாமியும், பதிவுத்திருமணம் செய்து வைத்த பதிவாளரும் நேற்று பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். கைதான இருவரையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்பகுதியை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரும் யாழ் வாலிபரும்...
யாழ் நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை எதிர்வரும் 20ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்களை யாழ் பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் இருந்து நான்கு சந்தேகநபர்கள் யாழ் பொலிஸ்...
இரண்டு கிலோகிராம் கஞ்சா பொதியை யாழில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற நபரை 06.10.2016 யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக சங்கானைப் பகுதியிலிருந்து கஞ்சா பொதியொன்று பஸ்ஸில் கைமாற்றப்படுவதாக கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்து குறித்த பஸ்ஸை மறித்துச் சோதனை செய்த பொலிஸார் அச்சந்தேகநபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த...
யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாகவும் இதனால் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்பில் பாடம்...
யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். யாழ். குடாநாட்டில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியின் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலையில்...
யாழ். இராசாவின் தோட்டம் வீதியில், 1 கிலோவும் 900 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதியுடன் வீதியில் நின்றிருந்த குடும்பஸ்தரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். 45 வயது மதிக்கத்தக்க குறித்த குடும்பஸ்தர் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்காக யாழ்.மடத்தடி வீதியில் நின்றிருந்த போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த நபர்...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இந்த மாத இறுதிக்குள், சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கின் நிலைமை தொடர்பில் மாணவி...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து காரைநகர் கடற்பரப்பில் படகொன்றில் வந்து மீன்பிடித்துக் கொண்டிந்த மீனவர்களே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரிடமிருந்து மீனவர்களைப்...
யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்தே தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின் உறவுகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொர்பில் அமைச்சர் சுவாமி நாதனை இவ்வாரம் நடைபெறவுள்ள நாடாளுமனற அமர்வின்போது சந்தித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத...
யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு இரண்டு பொலிசார் மீது யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆவணி மாதம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு பொலிசார், மதுபோதையில் சென்று கடையொன்றில் 100 ரூபாவை கொடுத்து 04 சிகரட் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு...
யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது .. இந்த வழக்கு விசாரணைக்காக 28 ஆம் திகதி புதன்கிழமை எடுத்துக்...
பாடசாலை செல்லும் 16 வயது மாணவனை தொண்டைமானாறு அக்கரைப் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று, மாணவனை மதுபானம் அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நிபந்தணை பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (28) அனுமதியளித்தார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம்...
ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனே தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க வந்ததாகவும், அவ்விளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது மகளுக்கு தடியினாலும் , கைகளினாலும் , கத்தியிலானும் , மிக மோசமாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன கடந்த வியாழக்கிழமை குறித்த சம்பவம் நடைபெற்று இருந்தது. குறித்த வீடியோ காட்சி பகிரப்பட்டத்தை அடுத்து , அது தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அதேவேளை...
Loading posts...
All posts loaded
No more posts