Ad Widget

‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்....

வாள்களுடன் இரண்டு பேர் யாழ்ப்பாணத்தில் கைது

சந்தேகத்திற்கிடமான முறையில் யாழ் நகரில் சுற்றித்திரிந்த இரண்டு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பகுதியில் உள்ளக வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடகம் ஒன்றின் பயிற்சிக்காக குறித்த வாள்கள் இரண்டையும் வைத்திருந்ததாக சந்தேகநபர்கள்...
Ad Widget

நாவலர் வீதியில் இடம்பெற்ற திருட்டு CCTV பதிவுகள் வெளியாகின

நாவலர் வீதியில் இடம்பெற்ற திருட்டு CCTV பதிவுகள் வெளியாகியுள்ளது. சைக்கிளில் வந்தவர்களே அதை செய்திருப்பதாக கருதப்படுகின்றது.

பொறுப்பதிகாரி உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை, சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான, கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். இதேவேளை “இது தொடர்பான...

சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு ! இருவர் காயம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுதுறை உத்தியோகத்தர்கள் என தெரியவந்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுன்னாகம் பல்பொருள் அங்காடியொன்றுக்கு முன்னால் வைத்தே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிவில் உடையில் இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகளை வெட்டியுள்ளனர். கடை ஒன்றில் கொள்ளையிட்டவர்களே...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றுகாலை அவர்கள் ஐந்து பேரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐந்து பேரையும் அநுராதபுரம்...

பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் 5 பொலிசார் கைது.சி ஐ டி விசாரணை!

யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் குற்றப்புலனாய்வுப்பிரிவின்  விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் பணியில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். இந்தத் தகவலினால், மாணவர்களின்...

07 பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு; மேலும் ஒருவரை கைது செய்ய பிடியாணை

2011ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தால், திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஏழு பேரின் விளக்கமறியலை நீடிக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர் மன்றில் முன்னிலையாக நிலையில் குறித்த நபருக்கு எதிராக மேல்...

வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது

யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், செவ்வாய்க்கிழமை (18) கூறினார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, செவ்வாய்க்கிழமை (18) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது....

எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்துக்கு நட்டஈடு

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரொருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் இராணுவ லெப்டினன், சுட்டுக்கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்தினருக்கு, இரண்டு மில்லியன் ரூபாயை, நட்டஈடாக வழங்கினார். பருத்தித்துறை இராணுவ முகாமில் 1998ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபர், கைவிலங்கிட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம்.றியாழ் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் 12 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை...

கள்ளத்தோணியில் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது

இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை, தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்த குற்றத்தில், ‘கியூ’ பிரிவு பொலிஸாரிடம் குறித்த இலங்கையர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று...

காவலில் இருந்த இளைஞன் மரணம்: பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட பொலிஸாரில், கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார மற்றும் இரண்டு பொலிஸார் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின்...

வாள்வெட்டு குற்றவாளிகளின் தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்ய யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு

மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான...

சுவரொட்டியை ஒட்டிய பெண்ணை ஜேர்மனுக்கு நாடுகடத்தத் திட்டம்!

மருதனார் மட பேருந்துத் தரிப்பிடத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் நேற்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே அவர்...

கிராம அலுவலரைக் கடத்தியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராமஅலுவலரை கடத்திய மூவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 13 மாதச் சிறைத்தண்டனை விதித்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தீர்ப்பளித்தார். மேலும், கிராமஅலுவலரின் சகோதரனை தாக்கி, அவருடைய 3 பற்களை உடைத்தமைக்காக ஒரு பல்லுக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 3...

கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்

வட்டுக்கோட்டை மேற்குப் பகுதியில் 1,000 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், நேற்றுப் புதன்கிழமை (12) உத்தரவிட்டார். மேற்படி சந்தேகநபர், கடந்த 10ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் 850 கிராம் கஞ்சாவுடன் 41...

பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது

மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண்...

12 கிலோகிராம் கஞ்சாவுடன் முன்னாள் போராளி கைது

மணற்காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் ​போது தான்...
Loading posts...

All posts loaded

No more posts